தமிழ் சினிமாவில் சாதாரணமாக சண்டை காட்சிகளை வைத்து மசாலா படங்கள் இயக்கும் இயக்குனர்களுக்கு நடுவே சமூகத்தில் இருக்கும் பல பிரச்சனைகளை திரைப்படம் வழியாக பேசும் இயக்குனர்கள் சிலர் உண்டு அப்படியான இயக்குனர்களில் வெற்றி மாறன் முக்கியமானவ.
தெலுங்கு சினிமாவில் இருக்கும் விஜய தேவர கொண்டா, அல்லு அர்ஜுன், ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் மாதிரியான நடிகர்களே தொடர்ந்து இந்த இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் அளவிற்கு வெற்றிமாறன் பெரிய இயக்குனராக வளர்ந்து இருக்கிறார்.
அவர் இயக்கிய திரைப்படங்களிலேயே உலக அளவில் பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் விடுதலை. அதனை தொடர்ந்து விடுதலை 2 திரைப்படமானது பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்கள் மத்தியிலும் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.
விடுதலை 2:
இந்த நிலையில் இந்த படம் வருகிற 20 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது விடுதலை முதல் பாகத்தை விட இந்த திரைப்படம் அதிக வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்காக சென்சார் சான்றிதழை வாங்குவதில் பெரும் பிரச்சனையை ஏற்பட்டுள்ளதாக பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.
பொதுவாக சென்சார் குழுவினர் ஏ என்கிற சான்றிதழை 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பார்ப்பதற்கான சான்றிதழாக வைத்திருக்கின்றனர். திரைப்படங்களில் அதிக ஆபாச காட்சிகளோ அல்லது வன்முறையான காட்சிகளோ இருந்தால் இந்த ஏ சர்டிபிகேட் வழங்கப்படும்.
ஆனால் விடுதலை 2 திரைப்படத்தில் அதற்காக வழங்காமல் படத்தில் இருக்கும் ஒரு வசனத்திற்காக வழங்கப்பட்டிருக்கிறது. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை வெளிப்படுத்தும் விதமான ஒரு பெரிய வசனம் திரைப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
தணிக்கை குழு கூறிய விஷயம்:
அந்த வசனத்தை நீக்கும் படி தணிக்கை குழு வெற்றி மாறனிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் அந்த வசனம்தான் திரைப்படத்தின் அஸ்திவாரமே அதனால் அதை நீக்கவே முடியாது என்று வெற்றிமாறன் கூறிவிட்டார். இதனால் அதை நீக்காவிட்டால் படத்திற்கு ஏ சான்றிதழ் தான் வழங்குவோம் என்று சென்சார் குழுவினர் கூறியுள்ளனர்.
பரவாயில்லை ஏ சான்றிதழ் கொடுத்தாலும் நான் மாற்ற மாட்டேன் என்று வெற்றிமாறன் கூறி இருக்கிறார். இந்த நிலையில் விடுதலை 2 திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் கூட இதுக்குறித்து சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் இருக்கின்றன.