Tag Archives: விடுதலை 2

8 நாட்களில் விடுதலை 2 படத்தின் வசூல்.. டோட்டல் டேமஜ் போல..!

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே வெளியான திரைப்படமாக விடுதலை 2 திரைப்படம் இருந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் அமையவில்லை.

முக்கியமாக திரைப்படத்தின் முக்கிய கதாநாயகனான சூரிக்கு இந்த திரைப்படத்தில் பெரிதாக எந்த காட்சிகளும் இல்லை என்று கூறப்படுகிறது. விடுதலை முதல் பாகத்தில் சூரிதான் முக்கிய கதாபாத்திரமாக இருந்தார்.

ஆனால் விடுதலை 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதிதான் முக்கிய கதாபாத்திரமாக இருப்பார் என்று பலரும் அறிந்த விஷயம் தான் என்றாலும் கூட சூரியின்  கதாபாத்திரத்திற்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்படியான காட்சிகள் இந்த திரைப்படத்தில் அமையவில்லை இந்த நிலையில் விடுதலை 2 திரைப்படத்தில் வசனங்களும் மிக அதிகமாக இருக்கிறது ஏதோ மாநாட்டுக்கு சென்றது போல தோன்றுகிறது என்று ரசிகர்கள் கூறினர்.

அதனை தொடர்ந்து விடுதலை 2 திரைப்படத்திற்கான வரவேற்பு என்பது குறைந்தது. படம் வெளியாகி எட்டு நாட்கள் நிறைவடைந்த நிலையில் மொத்தமாகவே இந்த திரைப்படம் 48 கோடிதான் வசூல் செய்து இருக்கிறது.

படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும்பொழுது இது மிகக் குறைந்த அளவிலான வசூல் என்று கூறப்படுகிறது. ஓடிடி விற்பனை மற்றும் சேட்டிலைட் விற்பனை மூலமாக சம்பாதிக்கும் தொகையை கணக்கிட்டால் கூட படத்திற்கு பெரிய லாபம் என்று எதுவும் வராது என்று கூறப்படுகிறது.

 

விடுதலை 2 முதல் நாள் வசூல் நிலவரம்.. எதிர்பார்த்த அளவு இல்லை..!

அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் செய்யும் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த திரைப்படம் விடுதலை. இதன் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டது.

முதல் பாகத்தை பொறுத்தவரை அதில் சூரிதான் படம் முழுக்கவும் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருப்பார். ஆனால் விடுதலை 2 திரைப்படத்தை பொறுத்தவரை இதில் கதாநாயகனாக விஜய் சேதுபதிதான் வருகிறார்.

படத்தின் வசூல்:

viduthalai 2

விஜய் சேதுபதியின் பழைய வாழ்க்கை, எதற்காக அவர் இந்த போராட்டத்தை முன்னெடுக்கிறார் இப்படி பல விஷயங்களை படம் பேசுகிறது. இந்த நிலையில் விடுதலை 2 திரைப்படம் முதல் பாகத்தை விடவும் அதிக வசூல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த படம் மொத்தமாக முதல் நாள் 7 கோடி ரூபாய்தான் வசூல் செய்துள்ளது. போக போக இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கலாம் என ஒருப்பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இத்தனை பேர் இருந்தும் இதை கவனிக்கலை.. விடுதலை 2 வில் வெற்றிமாறன் செய்த பெரிய தவறு..!

மக்கள் போராட்டத்தை கருவாக கொண்டு வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம் விடுதலை. விடுதலை திரைப்படத்தில் வாத்தியார் என்கிற புரட்சியாளரும் அவரை காப்பாற்றும் கிராம மக்களும் என கதை செல்கிறது. இந்த நிலையில் வாத்தியாரை பிடிக்க அங்கு வந்திருக்கும் காவலர்கள் தொடர்ந்து கிராம மக்களிடம் அதிகார மீறல்களில் ஈடுபடுகின்றனர்.

கிட்டத்தட்ட வீரப்பனை பிடிக்க சென்ற காவலர் குழு செய்த விஷயங்களை அப்படியே பதிவு செய்திருந்தார் வெற்றிமாறன். வீரப்பனை பிடிப்பதற்காக மக்களை விசாரிக்க அங்கு வைக்கப்பட்டிருந்தது போலவே வதை முகாம்கள் விடுதலை படத்திலும் காட்டப்பட்டிருக்கும்.

படத்தில் உள்ள தவறு:

viduthalai 2

ஆனாலும் ஆரம்பத்திலேயே கதை கற்பனை கதை என கூறிவிட்டார் வெற்றிமாறன். இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. இரண்டாம் பாகத்தில் மக்கள் ஒரு தவறை கண்டறிந்துள்ளனர்.

அதாவது விடுதலை திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் முதல் பாகத்தில் போலீஸாக நடித்திருந்தார். கௌதம் மேனன் அணியில் அவரும் இருப்பார். ஆனால் இந்த பாகத்தில் அவர் பண்ணையாராக நடித்திருக்கிறார்.

அது எப்படி ஒரே கதாபாத்திரம் போலீசாகவும் பண்ணையாராகவும் படத்தில் வருகிறது என்கிற கேள்வி ரசிகர்களுக்கு எழுகிறது. இவ்வளவு உதவி இயக்குனர்கள் இருந்தும் இதை கூடவா கவனிக்கவில்லை என்கின்றனர் பொது மக்கள்.

இவ்வளவு பண விரயம் தேவையா? விடுதலை 2 பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்.!

விடுதலை 2 திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியானது. இந்த படத்திற்கு ஏற்கனவே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. எப்பொழுது இந்த திரைப்படம் வெளியாகும் என்று மக்கள் காத்து வந்தனர்.

வடசென்னை திரைப்படம் மாதிரியே இந்த படமும் இரண்டாம் பாகம் வந்துவிடாமல் போய்விடுமோ என்கிற பயமும் ஒரு பக்கம் மக்களுக்கு இருந்தது.

ஏனெனில் விடுதலை திரைப்படமே மக்களிடம் அரசியல் சார்ந்து நிறைய விஷயங்களை பேசி இருந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர் மக்கள்.

விடுதலை 2 திரைப்படம்:

viduthalai 2

ஏனெனில் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதை தான் முழுக்க முழுக்க செல்ல இருப்பதாக கூறப்பட்டது. வாத்தியார் என்கிற அந்த புரட்சிகரமான கதாபாத்திரத்தை பார்க்க வேண்டும் என்று மக்களுக்கும் ஆவல் வந்தது.

இன்று வெளியான விடுதலை 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெற்று இருக்கிறது. பார்க்கும் மக்கள் எல்லோருமே படத்திற்கு நல்லபடியான வர விமர்சனத்தை அளித்து வருகின்றனர். பயில்வான் ரங்கநாதன் படம் குறித்து கூறும்பொழுது படத்தில் சீட்டின் நுனியில் அமர்ந்து படத்தை பார்ப்பது போல படம் அமைந்திருக்கிறது.

ஒரு காட்சிக்கு கூட நாம் சற்று நிதானமாக அமர்ந்து பார்க்க முடியவில்லை அவ்வளவு விறுவிறுப்பான கதை களத்தைக் கொண்டிருக்கிறது விடுதலை 2 திரைப்படம். ஆனால் இந்த திரைப்படத்தை இவ்வளவு நாட்கள் எடுத்திருக்க தேவையில்லை. இப்படி நாட்களை கடத்தி எடுப்பதால் தயாரிப்பாளருக்கு பணவிரயம் ஏற்படுகிறது.

எனவே இந்த விஷயத்தை வெற்றிமாறன் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

விடுதலை 2 வில் நீக்கப்பட்ட வசனங்கள்.. இந்த வார்த்தையெல்லாம் இடம் பெற்று இருக்கா..!

இன்று திரையரங்கிற்கு வரும் விடுதலை 2 திரைப்படத்தில் நிறைய காட்சிகள் தணிக்கை குழுவால் நீக்கப்பட்டுள்ளது. ஏ சான்றிதழ் கொடுக்கும் திரைப்படங்களில் பெரும்பாலும் அதிக வசனங்களையோ காட்சிகளையோ நீக்க மாட்டார்கள்.

ஆனால் விடுதலை திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலே கெடுபுடி அதிகமாக இருந்தது. இந்த திரைப்படத்தில் நிறைய விஷயங்களை நீக்க வேண்டும் என்று சென்சார் குழு கேட்ட பொழுதும் அதற்கு வெற்றிமாறன் ஒப்புக்கொள்ளவில்லை.

நீக்கப்பட்ட காட்சிகள்:

அதனால்தான் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனாலும் கூட நிறைய இடங்களில் காட்சிகளில் நீக்கங்கள் நடந்திருக்கின்றன. அதே போல நிறைய கெட்ட வார்த்தைகளை காவலர்கள் பேசுவது போல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.

அந்த காட்சிகளையும் மியூட் செய்து இருக்கின்றனர் இந்த நிலையில் அரசு அரசாங்கம் தேசிய இன விடுதலை மாதிரியான வார்த்தைகளும் மாற்றப்பட்டுள்ளன. அதே மாதிரி ஒரு காட்சியில் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஆயுதங்களை மக்களே அந்த போராட்ட களங்களில் இருந்து உருவாக்கிக்கணும் என்று வைத்த வசனத்தில் தணிக்கை குழு கூறியதால் அந்த ஆயுதம் ஓட்டா கூட இருக்கலாம் என்று சேர்த்து இருக்கின்றனர்.

வட சென்னைல நான் நடிக்க வேண்டியது.. பறிபோன 3 வாய்ப்புகள். மனசு கஷ்டப்பட்டுறப்பேன்.. விஜய் சேதுபதி ஓப்பன் டாக்

பெரும்பாலும் அரசியல் சார்ந்த விஷயங்களை தனது திரைப்படங்களில் காட்டும் சர்ச்சையான இயக்குனர்கள் படங்களில் நடிகர்கள் நடிக்க மாட்டார்கள். ஆனால் அதிலிருந்து மாறுபட்டவர் இயக்குனர் வெற்றிமாறன்.

இயக்குனர் வெற்றிமாறன் என்னதான் நிறைய விஷயங்களை தன் திரைப்படத்தில் பேசினாலும் அவரது திரைப்படத்தில் நடிப்பதற்கு நிறைய நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முக்கியமாக தெலுங்கு சினிமாவில் நிறைய நடிகர்கள் வெற்றிமாறன் படத்தில் நடிப்பதற்கு காத்திருக்கின்றனர் அப்படியாக தமிழ் சினிமாவிலும் காத்திருந்தவர்தான் நடிகர் விஜய் சேதுபதி.

இது குறித்து தனது பேட்டியில் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார் ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது வெற்றிமாறன் திரைப்படங்களில் நான் வாய்ப்பு கேட்டு இருக்கிறேன்.

விஜய் சேதுபதி கேட்ட வாய்ப்பு:

viduthalai 2

வெற்றிமாறனின் முதல் திரைப்படமான பொல்லாதவன் திரைப்படத்தின் போது நான் அங்கு சென்று வாய்ப்பு கேட்டு சென்றேன். ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு பிறகு ஆடுகளம் திரைப்படம் எடுக்கப்பட்ட பொழுதும் நான் வாய்ப்பு கேட்டேன்.

ஆனால் வெற்றி மாறன் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. பிறகு நான் வெகு காலங்கள் கழித்து பெரிய நடிகராக மாறிய பிறகும் வெற்றிமாறன் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் இருந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் வடசென்னை திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு வந்தது. என்னை நேரில் அழைத்து வெற்றிமாறன் படத்தின் கதையை கூறினார். ஆனால் அந்த சமயத்தில் ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.

இந்த நிலையில்தான் விடுதலை 2  திரைப்படத்தில் எட்டு நாட்கள் மட்டும் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சரி என்று நானும் நடிப்பதற்கு சென்றேன். ஆனால் அதற்குப் பிறகு அந்த படத்தில் முழுமையாக நடிக்க வேண்டியதாக இருந்தது.

ஒருவேளை எட்டு நாளில் என்னை அவர் வீட்டுக்கு அனுப்பி இருந்தால் நான் மிகவும் வருத்தப்பட்டு இருப்பேன் என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.

விஜய்தான் அந்த தத்துவம் இல்லாத தலைவரா?.. விடுதலை 2 குறித்து கூறிய விஜய் சேதுபதி..!

தமிழில் தொடர்ந்து அரசியல், சமூக பிரச்சினைகளை தனது திரைப்படங்களின் வழியாக கூறிவரும் முக்கியமான இயக்குனர்களில் வெற்றி மாறன் மிக முக்கியமானவர்.

ஏனெனில் பொதுவாக அரசியல் சார்ந்த விஷயங்களை திரைப்படங்களில் பேசும்போது அந்த திரைப்படங்களுக்கு வசூல் சாதனையோ அல்லது பெரிய வெற்றியோ கிடைக்காது.

ஆனால் அதையே வெற்றிமாறன் பேசும்பொழுது படம் வசூல் ரீதியான சாதனைகளையும் படைத்துவிடும். அதே சமயம் மக்களுக்கு தேவையான கருத்தையும் கூறிவிடும். அப்படியாக வெற்றிமாறன் இயக்கிய முக்கியமான திரைப்படம் விடுதலை.

விடுதலை திரைப்படம் பேசிய விஷயங்கள் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த திரைப்படமும் பேசாத விஷயங்களாகும். அதனால் அந்த திரைப்படம் தனித்துவமான படமாக இருந்தது. இந்த நிலையில் விடுதலை 2 திரைப்படமும் உருவாகி இருக்கிறது.

விஜய் குறித்து விடுதலை 2:

viduthalai 2

வருகிற 20-ஆம் தேதி விடுதலை 2 திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது விடுதலை 2 திரைப்படம் மீது மக்களுக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் இருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் பெரிய வெற்றியை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலை 2 ட்ரெய்லரில் ஒரு வசனம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் விஜய் சேதுபதி கூறும் பொழுது தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள். அதுவும் முன்னேற்றத்திற்கு உதவாது என்று ஒரு வசனம் இருக்கும்.

இது விஜய்யை குறிப்பிட்டு வைக்கப்பட்ட வசனமா என்று விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி வாத்தியார் தன்னை பற்றி கூறுவதற்காக அவரது நண்பரிடம் கூறும் ஒரு வசனம் தான் அது மற்றபடி யாரையும் குறிப்பிடும் படியான ஒரு வசனம் கிடையாது என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

அந்த டயலாக்கை நீக்க முடியாது.. என்ன வேணா பண்ணிக்கோங்க.. விடுதலை 2வால் சென்சார் குழுவோடு பிரச்சனை..! வெற்றிமாறனின் முடிவு..!

தமிழ் சினிமாவில் சாதாரணமாக சண்டை காட்சிகளை வைத்து மசாலா படங்கள் இயக்கும் இயக்குனர்களுக்கு நடுவே சமூகத்தில் இருக்கும் பல பிரச்சனைகளை திரைப்படம் வழியாக பேசும் இயக்குனர்கள் சிலர் உண்டு அப்படியான இயக்குனர்களில் வெற்றி மாறன் முக்கியமானவ.

தெலுங்கு சினிமாவில் இருக்கும் விஜய தேவர கொண்டா, அல்லு அர்ஜுன், ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் மாதிரியான நடிகர்களே தொடர்ந்து இந்த இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் அளவிற்கு வெற்றிமாறன் பெரிய இயக்குனராக வளர்ந்து இருக்கிறார்.

அவர் இயக்கிய திரைப்படங்களிலேயே உலக அளவில் பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் விடுதலை. அதனை தொடர்ந்து விடுதலை 2 திரைப்படமானது பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்கள் மத்தியிலும் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.

விடுதலை 2:

இந்த நிலையில் இந்த படம் வருகிற 20 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது விடுதலை முதல் பாகத்தை விட இந்த திரைப்படம் அதிக வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்காக சென்சார் சான்றிதழை வாங்குவதில் பெரும் பிரச்சனையை ஏற்பட்டுள்ளதாக பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.

viduthalai 2

பொதுவாக சென்சார் குழுவினர் ஏ என்கிற சான்றிதழை 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பார்ப்பதற்கான சான்றிதழாக வைத்திருக்கின்றனர். திரைப்படங்களில் அதிக ஆபாச காட்சிகளோ அல்லது வன்முறையான காட்சிகளோ இருந்தால் இந்த ஏ சர்டிபிகேட் வழங்கப்படும்.

ஆனால் விடுதலை 2 திரைப்படத்தில் அதற்காக வழங்காமல் படத்தில் இருக்கும் ஒரு வசனத்திற்காக வழங்கப்பட்டிருக்கிறது. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை வெளிப்படுத்தும் விதமான ஒரு பெரிய வசனம் திரைப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தணிக்கை குழு கூறிய விஷயம்:

அந்த வசனத்தை நீக்கும் படி தணிக்கை குழு வெற்றி மாறனிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் அந்த வசனம்தான் திரைப்படத்தின் அஸ்திவாரமே அதனால் அதை நீக்கவே முடியாது என்று வெற்றிமாறன் கூறிவிட்டார். இதனால் அதை நீக்காவிட்டால் படத்திற்கு ஏ சான்றிதழ் தான் வழங்குவோம் என்று சென்சார் குழுவினர் கூறியுள்ளனர்.

பரவாயில்லை ஏ சான்றிதழ் கொடுத்தாலும் நான் மாற்ற மாட்டேன் என்று வெற்றிமாறன் கூறி இருக்கிறார். இந்த நிலையில் விடுதலை 2 திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் கூட இதுக்குறித்து சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் இருக்கின்றன.

ரசிகர்களை மரியாதை இல்லாமல் நடத்தும் விஜய் சேதுபதி..! வெளிப்படையாய் கூறிய  பிரபலம்.!

தொடர்ந்து தமிழில் விடுதலை, மகாராஜா என தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. அதே போல தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் தொடர்ந்துவ் வித்தியாசமாக வரும் வேறு வகையான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் இவருக்கு கதாநாயகனாக நடிப்பதை விடவும் இப்போது வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இதனால் விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக நடிப்பதில்லை என முடிவு எடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த மாஸ்டர், விக்ரம் மாதிரியான இரண்டு திரைப்படங்களிலுமே க்ளைமேக்ஸில் விஜய் சேதுபதி இறந்துவிடுவார்.

எனவே இனிவரும் எல்.சி.யு படங்களில் இவர் இருப்பதற்கும் வாய்ப்பில்லை. எனவே தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் அடுத்து இவர் நடித்த மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியாக இருக்கிறது.

விஜய் சேதுபதியின் செயல்:

vijay sethupathi

சீனாவில் கண்டிப்பாக இந்த படம் 1000 கோடி வசூல் செய்யும் என பேச்சுக்கள் இருக்கின்றன. தொடர்ந்து விடுதலை படத்தின் அடுத்த பாகமும் அடுத்த மாதம் திரையரங்கிற்கு வர இருக்கிறது. இதில் வாத்தியார் என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அதில் வெற்றிமாறன் கோபமடைந்ததை அடுத்து அதிக சர்ச்சையானது. இதுக்குறித்து பத்திர்க்கையாளர் அந்தணன் சில விஷயங்களை கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இருவருமே மரியாதை தெரியாமல் இருக்கின்றனர்.

இவர்கள் இருவருமே ரசிகர்களை போடா வாடா என மரியாதை இல்லாமல் அழைக்கின்றனர். பெரிய ஹீரோக்களே இப்படி செய்வதில்லை என கூறினார். அதற்கு பேட்டி எடுப்பவர் ரசிகர்களுடன் நெருக்கமாக காட்டி கொள்வதற்காக அவர் அப்படி அழைத்திருக்கலாம் அல்லவா என கேட்டார்.

அதற்கு பதிலளித்த அந்தணன் அதே போல ரசிகனும் நினைத்தால் விஜய் சேதுபதி நிலை என்னவாகும் என கேட்டுள்ளார்.

 

ஆதிக்க வர்க்கத்துக்கு எதிரான சவுக்கடி… விடுதலை 2 ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி  முக்கிய கதாபாத்திரமாகவும் இரண்டாம் கதாபாத்திரமாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தார்.

சூரி கதாநாயகனாக நடித்திருந்தாலும் கூட இந்த படத்தின் கதைகளம் சிறப்பாக இருந்தது. மேலும் சூரியக்க கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரமும் சிறப்பாக இருந்தது. இதனால் இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வந்தது இரண்டாம் பாகத்தை பொருத்தவரை இதில் விஜய் சேதுபதிதான் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்திருக்கிறார்.

இரண்டாம் பாகம்:

viduthalai 2

இந்த படத்தில் இளையராஜா இசையமைத்து பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதற்கே அதிக வரவேற்பு கிடைத்து இருந்தது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் ஒன்று வெளியாகியிருக்கிறது. அது மிகப்பெரும் அரசியலை பேசும் ஒரு படமாக விடுதலை 2 இருக்கிறது என்பதை வழிகாட்டுகிறது.

ட்ரைலரின் படி சாதி வர்க்கம் என்று பேசி ஆதிக்கம் செய்யும் ஆட்களுக்கு எதிராக போராடும் ஒரு போராளியாக தான் விஜய் சேதுபதி முதலில் உருவாகிறார். பிறகு அரசியல் காரணங்களுக்காக அவர் எப்படி கெட்டவராக காண்பிக்கப்படுகிறார் என்பதை பற்றி படம் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் விஜய் சேதுபதியின் கடந்த கால வாழ்க்கை மற்றும் நிகழ்காலத்தில் சூரிக்கும் விஜய் சேதுபதியும் நடக்கும் விஷயங்கள் ஆகியவை கொண்டு கதை செல்கின்றன.

 

 

 

விடுதலை 2 வருமா வராதா?.. ஒரு வழியாக களத்தில் இறங்கிய வெற்றிமாறன்!..

தமிழ் மக்கள் மத்தியில் அதிக அதிர்வலையை ஏற்படுத்திய முக்கியமான திரைப்படங்களில் விடுதலை திரைப்படமும் ஒன்று. நடிகர் சூரி முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமான இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் அதிக வரவேற்பை பெற்றது. மேலும் படம் வந்த சமயத்திலேயே வெகுவாக பேசப்பட்டது.

இந்த நிலையில் பாதியிலேயே விடுதலை படத்தின் முதல் பாகம் முடிந்திருந்தது. அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து செல்லும் என்று பேச்சுக்கள் இருந்தன. ஆனால் வட சென்னை 2 போலவே இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வராமலேயே போய்விடுமோ என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் இருந்து வந்தது.

ஆனால் முதல் பாகம் தயாரிப்பு வேலைகள் நடந்தப்போதே இரண்டாம் பாகத்திலும் முக்கால்வாசி வேலைகளை வெற்றிமாறன் முடித்துவிட்டதாக கூறப்பட்டது. அதற்கு தகுந்தாற் போல சர்வதேச திரைப்பட விழாக்களில் விடுதலை 2 திரைப்படம் ஒளிப்பரப்பானது.

viduthalai

இப்படியிருக்கும்போது ஏன் அந்த படம் இன்னும் தமிழில் வரவில்லை என்கிற கேள்வி பலருக்கும் இருந்தது. படத்தில் சேர்க்க வேண்டிய காட்சிகள் கொஞ்சம் இருப்பதாகவும் அதை சேர்த்த பிறகு விரைவில் படம் திரைக்கு வரும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்சமயம் விடுதலை 2 படத்திற்கான படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்திலேயே படப்பிடிப்பை முடித்து படத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுதலை 2 எடுத்து முடிச்சாச்சா இல்லையா!.. ஒரு முடிவுக்கு வாங்கைய்யா… குழப்பத்தில் இருக்கும் நெட்டிசன்கள்!..

Viduthalai 2 : விடுதலை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம் விடுதலை 2. விடுதலை திரைப்படம் கிட்டத்தட்ட வீரப்பனை சத்தியமங்கலம் காடுகளில் தேடி பிடிக்க காவல் படை சென்ற பொழுது அங்கிருந்த மக்களுக்கு செய்த அநீதியை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

ஆனால் அதில் கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வெற்றிமாறன் சில விஷயங்களை செய்திருந்தார். வீரப்பன் குறித்து ஜி5 நிறுவனத்தின் டாக்குமென்டரி வெளியான பொழுதுதான் அதற்கும் விடுதலை திரைப்படத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையை மக்களால் கண்டுபிடிக்க முடிந்தது.

இந்த நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு விட்டதா என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்து வந்தது.  படக்குழுவினரை பொறுத்தவரை விடுதலை படத்தின் முதல் பாகம் எடுக்கப்பட்ட போதே இரண்டாம் பாகத்திற்கான காட்சிகளும் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

அதற்கு தகுந்தார் போல தற்சமயம் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட்டது என்று கூறப்படுகிறது. அதற்கு அவற்றை பார்த்த மக்கள் அனைவரும் வெற்றிமாறனுக்கும் நடிகர் சூரிக்கும் வாழ்த்துக்களை கூறி வந்த புகைப்படம் வெளியானது.

ஆனால் தமிழ் பத்திரிகையாளர்களை பொறுத்தவரை விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இனிமேல்தான் நடக்கப் போகிறது என்பதாக கூறி வருகின்றனர். இதனால் மிகுந்த குழப்பத்தில் இருக்கின்றனர் மக்கள். விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படாமல் இருந்தால் எப்படி அது திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

அப்படி திரையிடப்பட்டு விட்டது என்றால் திரும்பவும் விடுதலை படப்பிடிப்பு எதற்கு நடத்தப்பட வேண்டும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து படக் குழுவில் கூறும் பொழுது படத்தில் விடுபட்ட காட்சிகள் திரைப்பட விழாவில் வரவில்லை.

அவற்றை தனியாக படம் பிடித்து திரும்ப படத்தில் சேர்க்க இருக்கிறோம் என்று கூறுகின்றனர் எப்படியும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.