viduthalai

விடுதலை 2 எடுத்து முடிச்சாச்சா இல்லையா!.. ஒரு முடிவுக்கு வாங்கைய்யா… குழப்பத்தில் இருக்கும் நெட்டிசன்கள்!..

Viduthalai 2 : விடுதலை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம் விடுதலை 2. விடுதலை திரைப்படம் கிட்டத்தட்ட வீரப்பனை சத்தியமங்கலம் காடுகளில் தேடி பிடிக்க காவல் படை சென்ற பொழுது அங்கிருந்த மக்களுக்கு செய்த அநீதியை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

ஆனால் அதில் கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வெற்றிமாறன் சில விஷயங்களை செய்திருந்தார். வீரப்பன் குறித்து ஜி5 நிறுவனத்தின் டாக்குமென்டரி வெளியான பொழுதுதான் அதற்கும் விடுதலை திரைப்படத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையை மக்களால் கண்டுபிடிக்க முடிந்தது.

இந்த நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு விட்டதா என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்து வந்தது.  படக்குழுவினரை பொறுத்தவரை விடுதலை படத்தின் முதல் பாகம் எடுக்கப்பட்ட போதே இரண்டாம் பாகத்திற்கான காட்சிகளும் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

அதற்கு தகுந்தார் போல தற்சமயம் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட்டது என்று கூறப்படுகிறது. அதற்கு அவற்றை பார்த்த மக்கள் அனைவரும் வெற்றிமாறனுக்கும் நடிகர் சூரிக்கும் வாழ்த்துக்களை கூறி வந்த புகைப்படம் வெளியானது.

ஆனால் தமிழ் பத்திரிகையாளர்களை பொறுத்தவரை விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இனிமேல்தான் நடக்கப் போகிறது என்பதாக கூறி வருகின்றனர். இதனால் மிகுந்த குழப்பத்தில் இருக்கின்றனர் மக்கள். விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படாமல் இருந்தால் எப்படி அது திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

அப்படி திரையிடப்பட்டு விட்டது என்றால் திரும்பவும் விடுதலை படப்பிடிப்பு எதற்கு நடத்தப்பட வேண்டும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து படக் குழுவில் கூறும் பொழுது படத்தில் விடுபட்ட காட்சிகள் திரைப்பட விழாவில் வரவில்லை.

அவற்றை தனியாக படம் பிடித்து திரும்ப படத்தில் சேர்க்க இருக்கிறோம் என்று கூறுகின்றனர் எப்படியும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.