Tag Archives: வைரமுது

ஒரு டூயட்டுக்கு இவ்வளவு விளக்கமா! 2 நிமிசத்தில் வைரமுத்து எழுதி பெரும் ஹிட் கொடுத்த பாடல்! –  எந்த பாடல் தெரியுமா?

நம் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை பார்த்து சாதரண துணை நடிகர்கள் என நாம் நினைத்திருப்போம். ஆனால் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பெரும் ஹிட் கொடுத்திருப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் ஹிட் படங்கள் எல்லாம் கொடுத்துவிட்டு தற்சமயம் ஒரு காமெடியனாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் இயக்குனர் சிங்கம் புலி.

சிங்கம்புலி தமிழ் சினிமாவில் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஒன்று ரெட் மற்றொரு திரைப்படம் மாயாவி. இந்த இரண்டு திரைப்படங்களுமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள்.

ரெட் திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்தார். பாடல் வரிகளை கவி பேரரசு வைரமுத்து எழுதினார்.

சிங்கம் புலி வைரமுத்துவிடம் பாடல் எழுத சென்றபோது வைரமுத்து நேராக “சுத்தி வளைக்காமல் என்ன மாதிரி பாட்டு வேணும் சொல்லு என கூறியுள்ளார். உடனே சிங்கம்புலி ஐயா முதல்வன் படத்தில் வர்ற குறுக்கு சிறுத்தவளே மாதிரி ஒரு பாட்டு வேணும் ஐயா. என கூறியுள்ளார்.

அதன் பிறகு பாடலுக்கான சூழலை 8 நிமிடத்திற்கு விளக்கியுள்ளார் சிங்கம் புலி. அதை கேட்ட வைரமுத்து ஒரு டூயட் பாட்டு அவ்ளோதான! என கூறிவிட்டு வேக வேகமாக எழுதி கொடுத்துள்ளார். ரெட் படத்தில் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி என வரும் அந்த பாடல் படம் வந்த பிறகு பெரும் ஹிட் கொடுத்தது.