Tag Archives: manimegalai

குரைக்காத நாயே கிடையாது.. மணிமேகலை குறித்து பேசிய பாபா மாஸ்டர்.!

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் பிரபலங்களில் மிக முக்கியமானவராக மணிமேகலை இருந்து வருகிறார். சன் மியூசிக் சேனல் மூலமாக பிரபலமடைந்த மணிமேகலை அதனை தொடர்ந்து விஜய் டிவியில் வரவேற்பை பெற்றார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி அவரது மார்க்கெட்டை இன்னமுமே அதிகரித்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரது காமெடிகளுக்கு அதிக வரவேற்புகள் கிடைத்தன. ஆனாலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான் மணிமேகலையின் ஆசையாக இருந்தது.

இந்த நிலையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 5 இல் தொகுப்பாளராக களம் இறங்கினார் மணிமேகலை. ஆனால் அந்த சீசனில் குக்காக வந்த வி.ஜே பிரியங்காவிற்கும் இவருக்கும் வந்த சண்டையின் காரணமாக இவர் விஜய் டிவியில் இருந்தே விலகினார்.

இந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார் மணிமேகலை. இந்த மேடையில் பேசிய மணிமேகலை “நான் தொகுப்பாளராக இருந்தப்போது எனக்கு பிராபாமன்ஸ் செய்ய வராது என்றார்கள்.

எனக்கு வராத ஒன்றில் நான் சிறப்பான பெயரை பெற்ற பிறகு இப்போது எனக்கு எப்போதும் வருகிற தொகுத்து வழங்கும் வேலை வராது என்கின்றனர் என இதுக்குறித்து மணிமேகலை பேசியிருந்தார்.

இந்த நிலையில் நிகழ்ச்சியின் நடுவராக இருந்த பாபா மாஸ்டர் உடனே மேடைக்கு வந்து மணிமேகலைக்கு ஆறுதல் கூறினார். மணிமேகலையின் வலி என்னவென்று எனக்கு தெரியும். அவரை முன்னால் வாழ்த்திவிட்டு பின்னால் திட்டுவதை பார்க்க முடிகிறது.

நாய் என்றால் குரைக்கதான் செய்யும். அதை ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது என கூறியுள்ளார் பாபா மாஸ்டர்.

இனி சின்ன திரையே வேண்டாம்.. அதிரடி முடிவெடுத்த மணிமேகலை..!

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த தொகுப்பாளர்களின் முக்கியமானவராக இருந்தவர் மணிமேகலை.

மணிமேகலை வெகு காலங்களாகவே சன் மியூசிக், விஜய் டிவி மாதிரியான டிவி சேனல்களில் தொகுப்பாளராக இருந்து வந்தார். ஆரம்பத்தில் சன் டிவியில் இருந்தாலும் அதற்குப் பிறகு விஜய் டிவியில்தான் வாய்ப்புகளை பெற்று பங்கேற்று வந்தார் மணிமேகலை.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் சீசன் துவங்கி ஐந்தாவது சீசன் வரை மணிமேகலை அதில் கோமாளியாக இருந்து வந்தார். ஐந்தாவது சீசனில் இருந்து தொகுப்பாளராக வாய்ப்பை பெற்று தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

ஆனால் அந்த சமயத்தில் அவருக்கும் விஜே.பிரியங்காவிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இந்த நிலையில் விஜய் டிவியில் இருந்து விலகினார் அவருக்கு இப்போது வரை பெரிதாக எந்த டிவி சேனலிருந்து தொகுப்பாளராக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதில் எந்த சேனலுக்கு போவது என்பது குறித்துதான் அவர் யோசித்து வருகிறார் என்றும் ஒரு பக்கம் பேச்சு இருக்கிறது.

அதுக்கெல்லாம் தனி தைரியம் வேணும் தம்பி… பிக்பாஸில் வாய் விட்ட வி.ஜே விஷால்.. பதிலடி கொடுத்த மணிமேகலை..!

சமீபத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலைக்கும் அதே விஜய் டிவியில் பணி புரிந்து வரும் வி.ஜே பிரியங்காவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மணிமேகலை தொகுத்து வழங்கி வந்த நிலையில் பிரியங்கா தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும் அதனால் அவர் விஜய் டிவியில் இருந்து விலகியதாகவும் பேச்சுக்கள் இருந்தன.

அதை நிரூபிக்கும் வகையில் பிறகு மணிமேகலையே ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதிலிருந்து சர்ச்சை துவங்கி பெரிதாக வெடித்து வந்து கொண்டிருந்தது.

வி.ஜே விஷாலின் கருத்து:

இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வரும் வி.ஜே விஷால் இது பற்றி கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ஒரு நிகழ்ச்சியில் சக ஊழியர்களுடன் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அதை வெளியில் சென்று கூறக்கூடாது.

manimegalai

பிடிக்கவில்லை என்றால் அமைதியாக விலகிவிட வேண்டும் ஆனால் மணிமேகலை அதை ஒரு வீடியோவாக போட்டார். இருந்தாலுமே கூட பிரியங்கா அதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை. அவர் நாகரிகமாக விலகிவிட்டார் என்று கூறியிருந்தார் விஜே விஷால்.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் மணிமேகலை தற்சமயம் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் அதில் அவர் கூறும் பொழுது தீமையை எப்பொழுதும் வெளியே கொண்டு வர வேண்டும் நன்மைக்கு ஆதரவாக தனியாக நின்று போராடுவதற்கு முதலில் ஒரு தனிப்பட்ட தைரியம் தேவைப்படுகிறது என்று பதிவிட்டு இருக்கிறார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாயை விட்ட வி.ஜே விஷால்.. மணிமேகலை குறித்து மீண்டும் அவதூறு.. கிளம்பிய பிரச்சனை..!

தற்சமயம் பிக் பாஸில் நல்ல போட்டியாளராக இருந்து வருபவர் வி.ஜே விஷால். ஆனால் தேவையில்லாமல் அவர் தற்சமயம் பேசியிருக்கும் விஷயம் மீண்டும் ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்கும் பிக் பாஸை போலவே எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் பரவின.

vj vishal

வாயை விட்ட வி.ஜே விஷால்:

அதனை உறுதிப்படுத்தும் வகையில் மணிமேகலையும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த பிரச்சனையில் பல விஜய் டிவி பிரபலங்களின் பெயர்கள் சிக்கியது. ஒரு வழியாக பிக் பாஸ் தொடங்கிய பிறகு இந்த பிரச்சினை அடங்கியது.

ஆனால் வி.ஜே விஷால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று தற்சமயம் அங்கே ஜெஃப்ரியுடன் சேர்ந்து கலந்துரையாடும் பொழுது மணிமேகலை மேல்தான் தவறு என்பதாக பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது மணிமேகலை தேவை இல்லாமல் அவசரப்பட்டு வீடியோவை வெளியிட்டு விட்டார்.

ஆனால் அப்பொழுதும் கூட பிரியங்கா சாந்தமாகதான் அதை கையாண்டார் பதிலுக்கு அவர் எந்த ஒரு வீடியோவும் போடவில்லை என்று பிரியங்காவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் இந்த பிரச்சனை மீண்டும் தலை தூக்க துவங்கியிருக்கிறது.

அந்த டிவி சேனலுக்கு மாறிய மணிமேகலை.. உருவாகும் புது நிகழ்ச்சி..!

ஆரம்பத்தில் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்து அதிக பிரபலமடைந்தவர் மணிமேகலை. அதனை தொடர்ந்து அவருக்கு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு பிறகு விஜய் டிவியில் தொடர்ந்து பயணித்து வந்தார் மணிமேகலை இந்நிலையில் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது.

அதில் பங்கேற்று வந்த மணிமேகலை சமீபத்தில் சில பிரச்சனைகள் காரணமாக விஜய் டிவியில் இருந்து விலகி இருக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்து மணிமேகலை என்ன செய்யப் போகிறார் என்பதே பலரது கேள்வியாக இருந்தது.

மணிமேகலையின் முடிவு:

திரும்பவும் சன் டிவிக்கு வருவாரா என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன ஆனால் சன் டிவியை பொறுத்தவரை ஒரு முறை அதிலிருந்து வெளியேறி விட்டால் பிறகு அதில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜீ தமிழ் இவருக்கு தொகுப்பாளராக வாய்ப்பு கொடுக்க இருப்பதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஜீ தமிழ் அடுத்து நடத்தவிருக்கும் முக்கிய நிகழ்ச்சியை மணிமேகலைதான் தொகுத்து வழங்க இருக்கிறார் என கூறப்படுகிறது.

மணிமேகலைக்கு வலையை வீசும் சன் டிவி.. ஆடிப்போய் விஜய் டிவி செய்த காரியம்..!

குக் வித் கோமாளிகள் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு நிரந்தரமாக விஜய் டிவியை விட்டு விலகி இருக்கிறார் மணிமேகலை. ஏனெனில் விஜய் டிவியின் நிர்வாகம் தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் மேலும் வி.ஜே பிரியங்காவிற்கு ஆதரவாக தான் அவர்கள் செயல்படுகிறார்கள் என்றும் மணிமேகலை பேசி இருக்கிறார்.

எப்பொழுது விஜய் டிவி வி.ஜே பிரியங்காவை கேள்வி கேட்கிறார்களோ அப்பொழுதுதான் மணிமேகலை திரும்ப வருவார் என்கின்றனர் ரசிகர்கள் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அடுத்து மணிமேகலை என்ன செய்யப் போகிறார் என்கிற ஒரு கேள்வி இருந்து வந்தது.

சன் டிவியின் முடிவு:

இந்த நிலையில் சன் டிவி தற்சமயம் மணிமேகலையிடம் பேசுவதற்கு  யோசித்து வருகின்றனர். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மற்ற நிகழ்ச்சிகளையும் மணிமேகலைதான் தொகுத்து வழங்க உள்ளார் என்றும் சன் டிவி நினைத்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த விஷயத்தில் விஜய் டிவி மணிமேகலைக்கு ஒரு பெரிய வாய்ப்பை கொடுப்பதன் மூலமாக மீண்டும் மணிமேகலையை சமரசம் செய்யலாம் என்று நினைக்கின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான ஒரு வாய்ப்பை இவருக்கு பெற்றுக் கொடுக்கலாம் என்று ஒரு பக்கம் விஜய் டிவி யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இன்னும் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவரவில்லை. விஜய் டிவியில் பிக் பாஸை மணிமேகலை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர் விஜய் சேதுபதி உடன் சேர்ந்து பங்கெடுப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும் எனவே அது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுக்கு செருப்புதான் பதில்.. குக் வித் கோமாளி விவகாரத்தில் பதில் கொடுத்த மாகாபா..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலைக்கும் வி.ஜே பிரியங்காவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைதான் தற்சமயம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்த பிரச்சனையில் மணிமேகலை முதன்முதலாக வி.ஜே பிரியங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால் மணிமேகலைக்கு ஆதரவாக விஜய் டிவியை சேர்ந்த எந்த ஒரு பிரபலமும் இதுவரை எந்த பதிவும் போடவில்லை.

ஏனெனில் விஜய் டிவியில் பணிபுரியும் இரண்டு நபர்களுக்கு இடையேயான பிரச்சனை என்பதால் அதை அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையில் அவர்கள் இருக்கின்றனர்.

மணிமேகலை குறித்து மாகாபா:

இந்த நிலையில் அவர்களை கலாய்க்கும் விதத்தில் மாகாபா சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மணிமேகலை சனிக்கிழமையில் தான் இந்த பதிவை போட்டிருந்தார். எனவே மா கா பா அதற்கு பதில் அளிக்கும் வகையில் சனிக்கிழமை சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக என்னிடம் எந்த பதிவும் இல்லை.

வீட்டில் செருப்பு மட்டும் தான் இருக்கிறது என்று கூறி செருப்பை போட்டோ எடுத்து போட்டு இருக்கிறார். இதனை பார்த்து டிஜே பிளாக்கும் அவரது வீட்டில் இருக்கும் செருப்புகளை போட்டோ எடுத்து போட்டு இருவரும் சேர்ந்து மணிமேகலையை கலாய்த்து இருக்கின்றனர். இந்த நிலையில் மணிமேகலைக்கு செருப்பை இப்படி பதிலாக கொடுத்திருக்கின்றனரே என்று கூறி இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

அவங்க அடக்கி வாசிக்கணும்.. கடுப்பான திவ்யா துரைசாமி.. பிரியங்காவின் நிஜ முகம்.!

வாழை திரைப்படத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருப்பவர் திவ்யா துரைசாமி. பெரும்பாலும் திவ்யாதுரைசாமி நடிக்கும் படங்கள் அதிகமாக கவனத்திற்கு வருவது கிடையாது.

ஆனால் வாழை திரைப்படத்தில் அவர் தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலமாக இப்பொழுது பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருக்கிறார். மேலும் குக் வித் கோமாளி சீசன் 5 இவர் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு அதிகமாக மக்கள் மத்தியில் தெரிந்த ஒரு முகமாக மாறியிருக்கிறார் திவ்யா துரைசாமி.

இந்த நிலையில் தற்சமயம் மணிமேகலை மற்றும் பிரியங்காவிற்கு இடையேயான சண்டைதான் குக் வித் கோமாளியில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. அதாவது குக் வித் கோமாளியில் மணிமேகலை திவ்யா துரைசாமியை பாராட்டி பேசிக்கொண்டிருந்த பொழுதுதான் இடையில் பிரியங்கா உட்புகுந்துள்ளார்.

உண்மையில் வந்த பிரச்சனை:

அவர் சில பாயிண்ட்டுகளை முன்வைத்து திவ்யா துரைசாமியை பாராட்டி இருக்கிறார். அப்பொழுது மணிமேகலை நான் பேசும்பொழுது அதற்கு குறுக்க வந்து அதை பேசவிடாமல் ஏன் பேசுகிறீர்கள் என்று பிரியங்காவிடம் கேட்டிருக்கிறார்.

இதுதான் சண்டைக்கு காரணமாக இருந்திருக்கிறது. இந்த நிலையில் திவ்யா துரைசாமிதான் இந்த சண்டைக்கு காரணம் என்று பலரும் பேச தொடங்கி இருக்கின்றனர். இதற்கு பதில் அளித்த திவ்யா துரைசாமி கூறும் பொழுது அவர்கள் என்னைப் பற்றி பேசும் பொழுது சண்டையிட்டு கொண்டார்கள் என்பது உண்மைதான்.

ஆனால் அந்த சண்டைக்கு நான் காரணம் கிடையாது நான் அவர்கள் இருவரையும் அமைதிப்படுத்த பார்த்தேன். மணிமேகலை கூட ஒரு கட்டத்தில் அமைதியாகிவிட்டார். ஆனால் பிரியங்கா தேவையில்லாத பல வார்த்தைகளை விட்டு மணிமேகலையை மிக மோசமாக பேசிவிட்டார்.

அதனால்தான் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை விட்டு சென்று விட்டார் என்று கூறியிருக்கிறார் இந்த நிலையில் மணிமேகலைக்கு பலரும் ஆதரவாக பேசி வரும் நிலையில் திவ்யா துரைசாமியின் ஆதரவும் மணிமேகலை பக்கமே இருப்பது தெரிகிறது.

வி.ஜே பிரியங்காவுக்கு எதிராக கூடும் கூட்டம்.. மணிமேகலை அணியில் மக்கள் விரும்பும் முக்கிய கோமாளி..

கடந்த இரண்டு தினங்களாகவே மணிமேகலை குறித்த விஷயங்கள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. சின்னத்திரை மூலமாக அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை.

ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக அதிகமாக பிரபலமானார். நிகழ்ச்சியில் என்னதான் கோமாளியாக நடித்தாலும் அதில் தொகுப்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான் அவருக்கு ஆசையாக இருந்தது.

அந்த வகையில் இந்த முறை குக் வித் கோமாளி சீசன் 5 மணிமேகலை தொகுப்பாளராக களமிறங்கினார். ஆனால் தற்சமயம் குக் வித் கோமாளியை விட்டு விலகிய மணிமேகலை சில சர்ச்சையான தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறும் பொழுது குக் வித் கோமாளியில் இருக்கும் இன்னொரு தொகுப்பாளர் தொடர்ந்து என்னை கேலி செய்து வருகிறார். எப்போதெல்லாம் தொகுப்பாளராக வந்து பேச வருகிறானோ அப்போதெல்லாம் என்னை அவமானப்படுத்துகிறார்.

ஆதரவு தெரிவித்த கோமாளி

இது குறித்து நான் அவரிடமே நேரடியாக கூறிவிட்டேன். மேலும் புரொடக்ஷன் டீமிலும் கூறினேன் ஆனால் அவர்களிடம் கூறும் பொழுது அவர்கள் அவர் பெரிய ஆளு அவரை பகைத்துக் கொள்ளாதே என்றெல்லாம் கூறினார்கள்.

எனக்கு சுயமரியாதை என்பது மிக முக்கியம் அவர்களுக்கு நிறைய நிகழ்ச்சிகளை கொடுக்கட்டும். அப்பொழுதுதான் அவர்கள் வளர்ந்து வருபவர்களையாவது விட்டு வைப்பார்கள் என்று மறைமுகமாக விஜே பிரியங்காவை தாக்கி பேசியிருந்தார் மணிமேகலை.

இந்த நிலையில் இதற்கு பலரும் ஆதரவு தெரிவிக்க துவங்கியிருக்கின்றனர்.  குக் வித் கோமாளியில் சக கோமாளி ஆன குரேஷியும் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

பிறகு அவரே அந்த பதிவை டெலிட் செய்து விட்டார். இதற்கு என்ன காரணம் என்று இப்பொழுது பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.

கோமாளிகளில் முக்கியமான கோமாளி நீதான்! –  மணிமேகலை குறித்து மனம் உருகிய வெங்கடேஷ் பட்!

சன் மியூசிக் தொடரில் விஜேவாக இருந்து தற்சமயம் சின்னத்திரையில் பெரும் உயரங்களை தொட்டிருப்பவர் மணிமேகலை. விஜய் டிவி பார்க்கும் நேயர்கள் அனைவருக்கும் தெரிஞ்ச ஒரு பெயராக மணிமேகலை இருக்கும். அந்த அளவிற்கு தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் மணிமேகலை.

குக் வித் கோமாளி தொடரில் பிரபலமான கோமாளியாக மணிமேகலை இருந்து வருகிறார். கடந்த இரண்டாவது சீசனில் துவங்கி வரிசையாக நான்காவது சீசன் வரை மணிமேகலை இருந்து வருகிறார். ஏற்கனவே இந்த வருடம் பாலா குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரவில்லை.

இந்த நிலையில் தற்சமயம் மணிமேகலையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். குக் வித் கோமாளியில்  மணிமேகலைக்கு என்று ஒரு ரசிக வட்டாரம் உண்டு.  அவர்கள் அனைவரும்  இதனால் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் மணிமேகலைக்கு பதிலளிக்கும்போது “உள்ள பெண் கோமாளிகளிலேயே நீதான் சிறந்த கோமாளி. நீ போவது என்பது குக் வித் கோமாளிக்கு ஒரு இழப்புதான். ஆனால் உன்னுடன் இருந்த நாட்களை நாங்கள் நினைவுகூர்வோம்” என மிகவும் வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.