Tag Archives: pennin manathai thottu

ஓவரா சம்பள கணக்கு பார்த்து அஜித் மிஸ் செய்த படம்!.. கைப்பற்றி ஹிட் கொடுத்த பிரபுதேவா!..

Prabhu deva and Ajith: தமிழில் வரிசையாக ஹிட் கொடுத்து வரும் நடிகராக அஜித் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் போன பொங்கலுக்கு வந்த துணிவு படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படமும் இன்னமும் வரவில்லை. சினிமாவை விடவும் அவர் உலகத்தை சுற்றி பார்ப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

எனவே இனி அஜித் குறைவான படங்களே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெகு காலங்களாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். விஜய் சினிமாவை விட்டு சென்ற பிறகு தமிழில் அதிக சம்பளம் வாங்கும் பெரும் நடிகராக அஜித் இருப்பார் என கூறப்படுகிறது.

ajith

1990 முதல் 2000 காலக்கட்டம் வரை பெரும்பாலான நடிகர்கள் காதல் தொடர்பான கதைகளிலேயே நடித்து வந்தனர். அந்த வகையில் அப்போது போட்டி நடிகர்களாக இருந்த அஜித் விஜய் சூர்யா மூவருமே தொடர்ந்து காதல் கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வந்தனர்.

இந்த நேரத்தில்தான் துள்ளாத மனமும் துள்ளும் என்கிற திரைப்படத்தை எடுத்து பெரும் வெற்றியை கொடுத்திருந்தார் இயக்குனர் எழில். இதனால் அவரது திரைப்படங்களில் நடிப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு வந்தனர் நடிகர்கள்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு காதல் கதையை எழுதிய எழில் அந்த கதையை இந்த முறை நடிகர் அஜித்திடம் கூறினார். அஜித்திற்கு இந்த கதை கேட்டவுடனேயே பிடித்துவிட்டது. ஆனால் அதற்கு அவர் 35 லட்சம் சம்பளமாக கேட்டார்.

அந்த படத்தை தயாரிக்க இருந்த தயாரிப்பாளர் காஜா மைதீனுக்கு அது அதிக தொகையாக பட்டது. எனவே 30 லட்சம் சம்பளத்திற்கு நடித்து கொடுக்குமாறு கேட்டார். ஆனால் அஜித் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அந்த சமயத்தில்தான் பிரபுதேவா வளர்ந்து வரும் நடிகராக இருந்தார்.

எனவே அவர் அஜித்தை விட குறைவான சம்பளத்திற்கே நடிக்க ஒப்புக்கொண்டார். பெண்ணின் மனதை தொட்டு என்கிற பெயரில் உருவான அந்த படத்திற்கு எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைத்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.