Tag Archives: thammanna

தமன்னாவின் காதல் முறிவுக்கு காரணமாக இருந்த நடிகர்.. இது என்ன புது கதை?

நடிகை தமன்னா தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலுமே மிக முக்கியமான பிரபலமாக இருந்து வருகிறார். தமிழில் கல்லூரி, கேடி மாதிரியான திரைப்படங்கள் மூலமாக இவர் அறிமுகமானார். இந்த நிலையில் அடுத்து நடிகை தமன்னா நடிப்பில் ஹிந்தியிலும் நிறைய திரைப்படங்கள் வர இருக்கின்றன.

தமிழில் தமன்னா நடித்த சமயத்தில் அவருக்கும் நடிகர் கார்த்திக்கும் இடையே காதல் இருந்ததாக ஒரு பேச்சு இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த காதல் வெற்றியடையவில்லை. பிறகுதான் அதிகமாக தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார் தமன்னா.

தமன்னாவை பொறுத்தவரை இப்போது வரை மார்க்கெட் குறையாத நடிகையாகதான் இருந்து வருகிறார். இந்த நிலையில் சில காலங்களுக்கு முன்பு இவர் ஹிந்தியில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தில் ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவோடு நெருக்கமான காட்சிகளில் நடித்தார் தமன்னா.

இதற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் வெகு காலங்களாகவே இவர்களது காதல் இருந்து வந்தது. அதற்கு பிறகு ஜெயிலர், ஸ்திரி 2 மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் அதிக கவர்ச்சியில் நடித்து வந்தார் தமன்னா.

தற்சமயம் தமன்னா அவரது காதலர் விஜய் வர்மாவோடு காதலை முறித்துக்கொண்டார் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதற்கு தகுந்தாற் போல இவர்கள் இருவரும் சமூக வலைத்தளங்களில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கியிருக்கின்றனர்.

இதன் மூலமாக இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. தமன்னா தொடர்ந்து கவர்ச்சியாக நடித்ததுதான் இவர்களது பிரிவுக்கு காரணம் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இதற்கு நடுவே வேறு நடிகருக்கும் தமன்னாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஆனால் இதுக்குறித்து எதுவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவருகின்றன.

இனி சினிமாவில் நடிக்க கூடாது..! சர்ச்சை பேச்சால் பிரச்சனையை சந்திக்கும் தமன்னா..

கல்லூரி, கேடி மாதிரியான திரைப்படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இந்த திரைப்படங்களுக்கு பிறகு பையா திரைப்படம்தான் தமன்னாவிற்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் வரவேற்புகளும் அவருக்கு அதிகரித்தது. தொடர்ந்து தனுஷ், விஜய், அஜித் என்று பிரபலமாக உள்ள எல்லா நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார்.

தமன்னா அதே சமயம் தெலுங்கு சினிமாவிலும் தமன்னாவிற்கு வரவேற்புகள் அதிகரித்து வருகிறது. தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் தமன்னா. இந்த நிலையில் தற்சமயம் இந்திய நடிகர் ஒருவரைதான் காதலித்து வருகிறார் தமன்னா.

தமன்னா சொன்ன விஷயம்:

thammana

மேலும் தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் வாய்ப்புகளைத் தேடி வருகிறார் சமீபத்தில் கூட ஹிந்தியில் வெளியான ஸ்த்ரீ 2 என்கிற திரைப்படத்தில் ஒரு பாடலில் நடனமாடி அதிக வரவேற்பு பெற்றார் தமன்னா. இந்த நிலையில் அவரிடம் ஒரு பேட்டியில் பேசும் பொழுது தென்னிந்திய திரைப்படங்களுக்கு இப்பொழுது இந்திய அளவில் வரவேற்பு கிடைக்கிறது.

அதற்கு காரணம் என்ன என்று கேட்டிருந்தனர். அதற்கு பதில் அளித்த தமன்னா தென்னிந்திய சினிமாவை மிகவும் பெருமைப்படுத்தி பேசி இருந்தார். ஆனால் இது வட இந்தியாவில் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து பாலிவுட்டில் நடித்துக் கொண்டு தென்னிந்திய சினிமாவை புகழ் பாடுகிறார் தமன்னா என்று அதிருப்தி தெரிவித்து வருகின்றனர் வட இந்தியா ரசிகர்கள். இதனால் பாலிவுட் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குறையலாம் என்று பேசப்படுகிறது.

போலீஸ்ல சிக்கியும் திருந்தல போல.. தமன்னா செய்த அந்த காரியம்.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்.!

Actress Tamannaah has been a leading actress in Tamil and Telugu languages ​​since her young age. Recently she ran into trouble for starring in a scam commercial.

பல வருடங்கள் ஆகியும் கூட இப்பொழுதும் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார் நடிகை தமன்னா. பெரும்பாலும் 40 வயதை தொடும் நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் பிரபலமாக இருப்பது என்பது கடினமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

ஆனால் இது எப்படி சாத்தியப்பட்டது என்றால் அதற்கு அவருடைய கவர்ச்சியான நடிப்புதான் காரணமாக இருந்தது. தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தமன்னா ஓரளவு கவர்ச்சியாக தான் நடித்து வருகிறார்.

அதனால்தான் அவருக்கு தமிழில் எந்த அளவிற்கு வரவேற்பு இருந்ததோ அதே அளவிற்கு தெலுங்கு சினிமாவிலும் வரவேற்பு இருந்தது. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று நடித்து வந்தார் தமன்னா. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு வாய்ப்புகள் என்பதே கிடைக்காமல் போனது.

தமன்னா பிரபலம்:

இந்த நிலையில் தொடர்ந்து ஹிந்தி தமிழ் தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகளை தேடி நடித்து வந்தார். இந்த நிலையில்தான் இவர் நடித்த லஸ்ட் ஸ்டோரிஸ் என்கிற சீரிஸ் அதிக பிரபலம் அடைந்தது.

tamanna bhatia

இந்த சீரியஸில் இவருக்கு படுக்கை அறை காட்சிகள் இருந்தது. அது தமன்னாவிற்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. எனவே அதிக கவர்ச்சி காட்டுவதன் மூலமாக தொடர்ந்து மார்க்கெட்டை பெற முடியும் என்று அறிந்தார் தமன்னா.

அதனை தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தில் காவாளா என்கிற ஒரு பாடலில் அதிக கவர்ச்சியுடன் நடனம் ஆடி இருந்தார். அந்த பாடல் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இப்பொழுது அதிக கவர்ச்சியுடன் நடித்து வருகிறார் தமன்னா.

அடுத்த விளம்பரம்:

tamanna bhatia

இதற்கு நடுவே ஒரு மோசடி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததன் மூலமாக தமன்னா பெரும் பிரச்சனைக்கு உள்ளாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. நடிகை தமன்னா விளம்பரம் நடித்த ஒரு நிறுவனம் மக்களிடம் ஏமாற்று வேலைகளை செய்திருக்கிறது.

அதற்காக சமீபத்தில் தமன்னாவை போலீசார் பிடித்து சென்ற சம்பவங்கள் நடந்தன. இந்த நிலையில் இனி தமன்னா விளம்பரங்களில் பார்த்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதும் ஒரு ரம்மி விளம்பரத்தில் இவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. போலீசில் சிக்கிய பிறகும் கூட தமன்னா திருந்தாமல் இன்னுமா அப்படியே இருக்கிறார் என்று இது குறித்து பேசி வருகின்றனர் நெட்டிசன்கள்.

தமன்னாவுக்கு ஜெயில் உறுதி.. ஆனால் சத்யராஜ் செஞ்ச மோசடி தெரியுமா? பகீர் கிளப்பும் பிரபலம்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மோசடி விளம்பரத்தில் நடித்ததற்காக தமன்னா பெரும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டார்.

இதனால் அவர் கைதாகவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் இருந்தன. பெட்டிங் மாதிரியான தளங்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகின்றன.

இதில் எது சரியான அப்ளிகேஷன் எது மோசடி செய்யக்கூடியது என்று மக்களுக்கே தெரியவில்லை. இந்த நிலையில் இதைப்பற்றி விவரம் தெரியாத தமன்னா இப்படியாக ஒரு விளம்பரத்தில் நடித்ததன் மூலமாக சிக்கலில் சிக்கியிருக்கிறார்.

உண்மையை கூறிய பிரபலம்:

இந்த நிலையில் இது குறித்து பத்திரிக்கையாளர் சேகுவாரா சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். பிரபலங்களை பொருத்தவரை அவர்களை இந்த மாதிரி விளம்பரங்களில் நடிக்க கூடாது. ஆனால் தமன்னா முழுக்க முழுக்க பணத்தின் மீது ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார்.

thammanna

ஒரு கட்டத்திற்கு பிறகு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அதிக ஆபாசத்தை காட்டத் தொடங்கினார். இப்படி எல்லாம் ஆபாசம் காட்டினால் அதிக வருமானம் வரும். வரவேற்பும் அதிகமாக கிடைக்கும் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்.

இப்படித்தான் அந்த விளம்பரத்திலும் சென்று நடித்து இருக்கிறார். இதே மாதிரி சத்யராஜ் முன்பு ஒரு மோசடி செய்தார். ஈமு கோழி விற்பனை என்று கூறி ஒரு விளம்பரத்திலும் நடித்திருந்தார் சத்யராஜ். ஆனால் ரஜினி மாதிரியான பெரிய நடிகர்களை இந்த மாதிரி எந்த விளம்பரத்திலும் பார்க்க முடியாது. அவர்களுக்கு இருக்கும் அந்த புத்திசாலித்தனம் இவர்களுக்கு இருப்பதில்லை என்று கூறி இருக்கிறார் பத்திரிக்கையாளர் சேகுவேரா.

அப்படியே தெரியும் போல.. ஒளிவு மறைவு இல்லாமல் ஆடை அணிந்து போஸ் கொடுக்கும் தமன்னா!..

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை தமன்னா. கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பு பெற்ற நடிகையாகவே இருந்து வருகிறார் என்பது சாதாரண விஷயம் கிடையாது.

இந்த 20 வருடங்களுக்குள்ளாக தமிழ் சினிமாவில் அறிமுகமான எத்தனையோ நடிகைகள் தற்சமயம் அடையாளம் தெரியாமல் காணாமல் போய் இருக்கின்றனர்.

அப்படி இருந்தும் கூட தமன்னா தொடர்ந்து தனக்கான ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருக்கின்றார். தமிழில் கேடி என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானாலும் கூட அவருக்கு முக்கிய திரைப்படமாக இருந்தது பையா திரைப்படம்தான்.

சிறு வயதில் சினிமா ஆசை:

பையா திரைப்படத்தில் நடிக்கும் போது தமன்னாவிற்கு 19 வயது தான் ஆகியிருந்தது. ஆனால் அவருக்கான ரசிக்கப்பட்டாளம் என்பது தமிழ் சினிமாவில் பெரிதாக உருவாகியிருந்தது. தொடர்ந்து அதனை தொடர்ந்து ஒரு கவர்ச்சி நடிகையாக மாறினார் தமன்னா.

சுறா, சிறுத்தை என்று பெரிய நடிகர்களுடன் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் அப்போது அதிகமாக கவர்ச்சி காட்டி வந்தார் தமன்னா. இதனாலேயே அவருக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். பொதுவாகவே கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளுக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிடும்.

அந்த வகையில் தெலுங்கிலும் வாய்ப்பு பெற்று நடிக்க தொடங்கினார் தமன்னா. சில நாட்களிலேயே தெலுங்கில் பிரபலமான ஒரு நடிகையாக தமன்னா மாறி இருந்தார். இதற்கு நடுவே அவருக்கு வயதான காரணத்தினால் வாய்ப்புகள் ஒரு கட்டத்தில் குறைய தொடங்கின.

அளவை கூட்டிய தமன்னா:

அந்த கட்டத்தில் கவர்ச்சியின் அளவையும் அதிகப்படுத்தினார் தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் என்கிற ஒரு சீரியஸில் ஹிந்தியில் நடித்த தமன்னா அதில் எக்கச்சக்கமான கவர்ச்சியில் இறங்கி நடித்திருந்தார். மேலும் அதில் அவருக்கு படுக்கையறை காட்சிகளும் இருந்தது.

அதன் மூலம் சினிமாவிலும் பிரபலமான நடிகையாக தமன்னா மாறினார் மேலும் மீண்டும் அதன் மூலம் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது தற்சமயம் மீண்டும் தமிழில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிவப்பு ஆடை அணிந்து சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக வைரல் ஆகி வருகிறது.

ரோஜா நடிச்ச அந்த படத்தோட காப்பியா!.. எப்படியிருக்கு அரண்மனை 4 திரைப்படம்!.

தமிழில் வெற்றிக்கரமாக பேய் படங்களை இயக்கி வரும் இயக்குனராக சுந்தர் சி இருந்து வருகிறார். ராகவா லாரன்ஸ் ஒவ்வொரு படத்திற்கும் பேய்களின் எண்ணிக்கையை அதிகரித்த போதும் சுந்தர் சி அப்படி செய்யாமல் தொடர்ந்து ஒரே ஒரு பேயை வைத்தே திரைப்படத்தை கொண்டு சென்றார்.

வழக்கமான சுந்தர் சி திரைப்படம் போலவே இந்த திரைப்படத்திலும் ஒரு அரண்மனை அந்த அரண்மனையில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை அடிப்படையாக கொண்டே கதை செல்கிறது.

thammanna aranmanai 4

படத்தின் கதை:

படத்தின் கதைப்படி சுந்தர் சியின் தங்கையான தமன்னா சந்தோஷ் பிரதாப்பை காதலித்து வருகிறார். அவரது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் காதலனை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடுகிறார். பிறகு 10 வருடங்கள் கழித்து தமன்னா தற்கொலை செய்துக்கொண்டதாக சுந்தர் சிக்கு தகவல் வருகிறது.

தமன்னாவின் கணவரும் மாரடைப்பில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அநாதையாக இருக்கும் தங்கையின் குழந்தைக்காக அவர்கள் வாழ்ந்த அரண்மனைக்கு செல்கிறார் சுந்தர் சி. அப்போதுதான் தனது தங்கையும் அவரது கணவரும் இயற்கையாக இறக்கவில்லை.

கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது சுந்தர் சிக்கு தெரிகிறது. மேலும் இந்த நிகழ்வுகளுக்கு பின்னால் ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதையும் அதனால் தனது தங்கை குழந்தை உயிருக்கே ஆபத்து என்பதையும் அறிகிறார் சுந்தர் சி.

aranmanai-4-poster

இதற்கு நடுவே தமன்னாவின் ஆன்மாவும் சுந்தர் சியும் சேர்ந்து அந்த குழந்தையை காப்பாற்றுவதே கதையாக இருக்கிறது. படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் எல்லாம் நன்றாக வந்துள்ளன. ஆனால் காமெடிக்கு பல நடிகர்கள் இருந்தும் கூட படத்தில் காமெடி அவ்வளவாக எடுப்படவில்லை.

இதனை தாண்டி ரோஜா நடித்த பொட்டு அம்மன் என்கிற திரைப்படத்தின் கதையும் அரண்மனை 4 படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். எப்படி இருந்தாலும் படத்தை ஒரு முறை திரையரங்கில் பார்க்கலாம்.

கட்சி உள்விவகாரத்தால் சிக்கலில் சிக்கிய அரண்மனை 4 – உதயநிதிதான் மனசு வைக்கணும்!..

Aranmanai 4: ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி திரைப்படம் வெளியான பிறகு பேய் படங்களுக்கான வரவேற்பு என்பது தமிழ் சினிமாவில் அதிகரிக்க துவங்கியது. அதனை தொடர்ந்து லாரன்ஸ் முனி திரைப்படத்தின் ஒவ்வொரு பாகங்களாக எடுத்து வந்தார்.

அதேபோல இயக்குனர் சுந்தர் சியும் படம் எடுப்போம் என்று இயக்கிய திரைப்படம்தான் அரண்மனை திரைப்படம். அரண்மனை திரைப்படத்தின் முதல் பாகம் நல்ல வெற்றியை கொடுத்ததை அடுத்து அடுத்த பாகங்கள் வர துவங்கின.

மூன்றாம் பாகம் வரை வந்த அரண்மனை திரைப்படம் மூன்று முறையும் நல்ல வெற்றியை தான் கொடுத்திருந்தது. இதனை தொடர்ந்து நான்காம் பாகம் படமாக்கப்பட்டுள்ளது. 2020 லிருந்தே அரண்மனை நான்காம் பாகத்தின் படபிடிப்பு துவங்கப்பட்டு விட்டது. ஆனால் கொரோனா வந்ததன் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பில் தாமதமானது.

raashi khanna

இதில் முக்கிய கதாபாத்திரமாக தமன்னா நடித்திருக்கிறார். சுந்தர் சி திரைப்படத்தைப் பொறுத்தவரை அனைத்து திரைப்படங்களிலும் கவர்ச்சி கொஞ்சம் அதிகமாக இருக்கும். தற்சமயம் அந்த விஷயத்தில் தமன்னா பிரபலமாக இருப்பதால் அவரையும் ராஷி கண்ணாவையும் முக்கிய கதாபாத்திரமாக களம் இறக்கி இருக்கிறார் சுந்தர் சி.

சுந்தர் சி தயாரித்த இந்த திரைப்படத்தை வாங்கி வெளியிடும்  உரிமத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இதில் பிரச்சனை என்னவென்றால் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஒரு பா.ஜ.க அரசியல்வாதியும் இருக்கிறாராம்.

இது கட்சி ரீதியாக தங்களுக்கு பிரச்சினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று நினைத்த உதயநிதி தற்சமயம் இந்த படத்தை வெளியிட முடியாது என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் முதல் தயாரிப்பாளரான குஷ்புவுமே பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர்தான்.

இந்த நிலையில் வெளியிடுவதற்கான உரிமத்தை மாற்றும் நிலையில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமத்து ஆடலும் பாடலும் நிகழ்ச்சியா இது!.. தமன்னாவால் அநாகரிகமாக முடிந்த இசை நிகழ்ச்சி!..

Thammanna : இசை நிகழ்ச்சி கலாச்சாரம் என்பது தற்சமயம் தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் அதிகமாக வரவேற்பை பெறும் ஒரு விஷயமாக இருக்கிறது. இசையமைப்பாளர்களுக்கு திரைத்துறையில் படங்களுக்கு இசையமைத்து கிடைக்கும் பணத்தை விடவும் இந்த மாதிரியான இசை நிகழ்ச்சிகளை நடத்தும் பொழுது அதிக காசு கிடைக்கின்றது.

ஏற்கனவே அனிருத், ஏ.ஆர் ரகுமான், விஜய் ஆண்டனி போன்ற இசையமைப்பாளர்கள் பல இசை கச்சேரிகளை நிகழ்த்தி இருக்கின்றனர் அதில் ஏ.ஆர் ரகுமான் சென்னையில் நடத்திய இசை கச்சேரி கூட இடையில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

பிறகு ஏ.ஆர் ரகுமானே இதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார். இதேபோல பாடகர்களும் இசை நிகழ்ச்சி நடத்துவது உண்டு. எஸ்.பி.பி மாதிரியான பெரும் பாடகர்கள் உலகம் முழுவதும் பல இடங்களுக்கு சென்று தமிழர்களுக்காக பாடல் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

அந்த வகையில் பாடகர் ஹரிஹரன் இலங்கையில் ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அந்த இசை நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏனெனில் ஹரிஹரன் பாடலுக்கு எல்லா காலங்களிலுமே ரசிகர்கள் உண்டு.

ஆனால் இந்த பாடல் நிகழ்ச்சிக்கு நடுவே நடிகை தமன்னா ஜெயிலர் திரைப்படத்தில் வரும் காவாளி பாடலுக்காக நடனமாடி இருந்தார். இந்த நடனம் ஆடுவதன் மூலம் இவருக்கும் நல்ல காசு கிடைக்கிறது என்றாலும் அதிக கவர்ச்சியான உடை அணிந்து தமன்னா இந்த நடனத்தை ஆடியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தனன் கூறும் பொழுது கிராமங்களில் திருவிழா காலங்களில் ஆடலும் பாடலும் என்கிற நிகழ்ச்சி நடக்கும். அது மிகவும் மோசமான ஒரு நிகழ்ச்சியாகும். பிறகு அரசே அந்த நிகழ்ச்சி எல்லாம் இனி நடத்தக்கூடாது என்று கூறிவிட்டது.

ஆனால் அதையே சினிமாக்காரர்கள் செய்தால் யாருக்கும் தவறாக தெரிவதில்லை. கிட்டத்தட்ட கிராமத்தில் நடக்கும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி போலதான் தமன்னாவின் நடனமும் இருந்தது இந்த மாதிரியான இசை நிகழ்ச்சிகளுக்கு சென்று அநாகரிகமாக இப்படி நடனம் ஆடுவது தவறு என்று கூறியிருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.