News
சூப்பர் ஸ்டாருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தமன்னா – லீக் ஆன தகவல்
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். உள்ள நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். இவருக்கும் இருக்கும் ரசிகர்கள் காரணமாகவே ரஜினிகாந்த் நடிக்கும் எந்த ஒரு படமும் மாஸ் ஹிட் கொடுக்கும் என கூறப்படுகிறது.

தற்சமயம் இவர் இயக்குனர் நெல்சனுடன் இணைந்து ஜெயிலர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது. இதனால் நெல்சன் இயக்குவது குறித்து சிலருக்கு தயக்கம் இருந்தது. இதனால் ரஜினிகாந்தும் கூட திரைக்கதையில் கே.எஸ் ரவிக்குமாரை இணைத்தார்.
ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் துவங்கியிருக்கிறது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை தமன்னா ஒரு கதாபாத்திரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அந்த கதாபாத்திரம் கண்டிப்பாக கதாநாயகி கதாபாத்திரமாக இருக்காது என பேசப்படுகிறது. ஆனால் கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அது இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
