இந்த ஹீரோவ கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை? –  த்ரிஷா சொன்ன ரகசியம்!

வெகுநாட்களாக குறைவான பட வாய்ப்புகளை பெற்று வந்த த்ரிஷா, தற்சமயம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு அதிக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

த்ரிஷா பல பெரிய கதாநாயகர்களோடு நடித்துள்ளார் விஜய்,அஜித், சிம்பு, கமல்,ரஜினி, ஆர்யா,  சூர்யா என பல நடிகர்களோடு நடித்துள்ளார்.

வெகு காலமாக சினிமாவில் இருந்து வருகிறார். த்ரிஷா இப்போது வரை திருமணம் செய்துக்கொள்ளவில்லை. அவருக்கு திருமணத்தில் அவ்வளவாக விருப்பம் கிடையாது என பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் இதுக்குறித்து கேட்கப்பட்டது. ஒரு வேளை கற்பனையாக நீங்கள் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் யாரை திருமணம் செய்துக்கொள்வீர்கள்? என கேட்கப்பட்டது.

அதற்கு த்ரிஷா எனக்கு சல்மான்கானைதான் திருமணம் செய்துக்கொள்ள ஆசை. எனக்கு 8 வயது இருந்தது முதல் சல்மான்கானை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருவேளை நான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் எனில் சல்மான்கானைதான் திருமணம் செய்துகொள்வேன் என கண்டிப்பாக கூறினார் த்ரிஷா.

Refresh