Connect with us

ரேவதி எனக்கு கண்டிப்பா வேணும்!.. அடம் பிடிச்ச சல்மான்கான்!.. இப்படியெல்லாம் சம்பவம் நடந்துச்சா!..

salman khan revathi

Cinema History

ரேவதி எனக்கு கண்டிப்பா வேணும்!.. அடம் பிடிச்ச சல்மான்கான்!.. இப்படியெல்லாம் சம்பவம் நடந்துச்சா!..

Social Media Bar

தமிழில் நிறைய ஹிட் கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. தமிழில் நடிகர் ரஜினி, கமல் என பெரும் நடிகர்களை வைத்து தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா. அவர் இயக்கத்தில் வந்த திரைப்படங்களிலேயே பாபா திரைப்படம் மட்டும்தான் தோல்வியை கண்டது.

தமிழில் படங்களை இயக்குவதற்கு முன்பு ஹிந்தியில்தான் திரைப்படங்களை இயக்கி வந்தார் சுரேஷ் கிருஷ்ணா. அங்கு அவருக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இரண்டு திரைப்படங்களை ஹிந்தியில் செய்துவிட்டு மூன்றாவது படம் இயக்குவதற்கு முன்பு கே.பாலச்சந்தரை பார்க்க தமிழ்நாடு வந்தார் சுரேஷ் கிருஷ்ணா.

ஏனெனில் அவர் கே.பாலச்சந்தரிடம்தான் உதவி இயக்குனராக பணிப்புரிந்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு வந்தவருக்கு அண்ணாமலை படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தப்பிறகு தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வர துவங்கின.

இந்த நிலையில் ஹிந்தியில் முதல் இரண்டு திரைப்படங்களை இயக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றை பேட்டியில் பகிர்ந்துள்ளார் சுரேஷ் கிருஷ்ணா. 1989 இல் பிரேமா என்கிற தெலுங்கு படம் ஒன்று வெளியானது. அந்த திரைப்படத்திற்கு அப்போது நல்ல வரவேற்பு இருந்தது. அந்த படத்தில் வெங்கடேஷ் மற்றும் ரேவதி இணைந்து நடித்திருந்தனர்.

இந்த நிலையில் அந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா. அந்த கதை பிடித்திருந்ததால் அதில் நடிக்க சல்மான்கான் ஒப்புக்கொண்டார். ஆனால் ரேவதிதான் இந்த படத்திலும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பது அவரின் விருப்பமாக இருந்தது.

ஆனால் அந்த சமயத்தில் ரேவதிக்கு திருமணமான காரணத்தால் அவர் நடிப்பது சிரமம் என கூறியுள்ளார் சுரேஷ் கிருஷ்ணா. ஆனால் ரேவதி நடித்தால்தான் இந்த படத்தில் நடிப்பேன் என விடாப்பிடியாக இருந்தார் சல்மான்கான். இந்த நிலையில் ரேவதியிடம் பேசி அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top