என்னை ஏமாத்தி டைவர்ஸ் கொடுத்துட்டாரு.. வாய் திறந்த ஆர்த்தி.. திசை மாறும் ஜெயம் ரவி விவாகரத்து சங்கதி..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி கொடுத்த விவாகரத்து விஷயம்தான் இருந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஜெயம் ரவி தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் அவரும் அவருடைய மனைவியும் குடும்ப நலன் காரணமாக விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இதனால் கோபமடைந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது விவாகரத்து குறித்து எந்த ஒரு தகவலையும் ஜெயம் ரவி என்னிடம் அறிவிக்கவே இல்லை.

மனைவி அளித்த பதில்:

அவராகவே விவாகரத்து குறித்த செய்தியை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவருக்கு குடும்பத்தின் மீது எல்லாம் எந்த ஒரு அக்கறையும் கிடையாது தனது சுயநலத்திற்காகவே இந்த முடிவை ஜெயம் ரவி எடுத்திருக்கிறார்.

இதனால் நான் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. பலரும் என்னுடைய ஒழுக்கம் குறித்து தவறான விஷயங்களை பேச துவங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் எனது குழந்தைகளுக்கு ஆதரவாக நான் நிற்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

Social Media Bar

ஏனெனில் என்ன நடக்கிறது என்று புரியாமல் எனது குழந்தைகள் நிற்கின்றனர். இப்படியான ஒரு நிலைக்கு ஜெயம் ரவி எங்களை ஆளாக்கிவிட்டார் என்று கூறும் வகையில் எழுதி இருந்த அந்த அறிக்கை தற்சமயம் அதிக வைரலாக துவங்கியிருக்கின்றது.

இவ்வளவு பெரிய நடிகராக இருக்கும் ஜெயம் ரவி தனது மனைவியிடம் அனுமதி கூட வாங்காமல் விவாகரத்து குறித்த செய்தியை வெளியிட்டுள்ளாரே என்று பலரும் அவரை விமர்சிக்க துவங்கியிருக்கின்றனர்.