Latest News
ஒருத்தர் தப்பு பண்ணுனாலும் மொத்த படத்தையும் மொதல்ல இருந்து எடுக்கணும் – இரவின் நிழல் தயாரிப்பு பத்தி பேசிய பார்த்திபன்
உலக அளவில் எடுக்கப்படும் விதம் விதமான திரைப்பட முறைகளை துணிவோடு சில இயக்குனர்கள் தமிழில் முயற்சி செய்வதுண்டு. பார்த்திபன், கமல்ஹாசன் போன்றோரை இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த வகையில் தற்சமயம் பார்த்திபன் இயக்கி வெளியாக இருக்கும் திரைப்படம் இரவின் நிழல்.
ஏற்கனவே அவர் ஒத்த செருப்பு என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் கேமிரா ஒரே இடத்தில் இருக்கும். படம் முழுக்க பார்த்திபன் மட்டுமே இருப்பார். வேறு எந்த ஒரு கதாபாத்திரமும் இருக்காது. இதுவரை தமிழில் வந்த திரைப்படங்களிலேயே திரையில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் வந்த திரைப்படம் என்கிற பெயரை ஒத்த செருப்பு வாங்கியது.
அதற்கு பிறகு தற்சமயம் எடுத்திருக்கும் இரவின் நிழல் திரைப்படம் தமிழில் ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படமாகும்.
பொதுவாக திரைப்படம் எடுக்கும்போது அதிகப்பட்சம் ஐந்து நிமிடம் வரை ஒரு டேக்கில் படத்தை எடுப்பார்கள் பின்பு கட் செய்துவிட்டு இடைவெளி விட்டு அடுத்த காட்சியை எடுப்பார்கள்.
ஆனால் இரவின் நிழல் படம் முழுக்க முழுக்க சிங்கிள் ஷாட் படமாகும். கேமிராவை ஆன் செய்து அதை கட் செய்யாமல் ஆஃப் செய்யாமல் 3 மணி நேரம் தொடர்ந்து அப்படியே படத்தை எடுக்க வேண்டும். அப்படிதான் இரவின் நிழல் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் படத்தில் சிறு பிழை ஏற்பட்டாலும் கூட படத்தை திரும்பவும் முதல் காட்சியில் இருந்து எடுக்க வேண்டும். ஆனால் அவ்வளவு கடினம் இருந்தபோதும் படத்தை முழுமையாக எடுத்துள்ளார் பார்த்திபன்.