என்னுடைய காதல் அனுபவம்.. 43 வயதில் உண்மையை கூறிய அனுஷ்கா..!

தமிழ் தெலுங்கு என்று இரண்டு சினிமாவிலும் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா.

அருந்ததி என்கிற ஒரு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு தமிழ் இரண்டு மொழிகளிலும் அவருக்கு ஏக்கசக்கமான வரவேற்பு கிடைத்தது. ஒரு நடிகையை முக்கிய கதாபாத்திரமாக வைத்து இவ்வளவு மாஸ் எலமெண்ட் கொண்ட ஒரு திரைப்படத்தை இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் பார்த்ததே கிடையாது என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவிற்கு சிறப்பான திரைப்படமாக இருந்தது அருந்ததி திரைப்படம். அதற்கு பிறகு தமிழில் பெரிய நடிகர்கள் அனைவருடனும் கதாநாயகியாக நடித்தார் அனுஷ்கா. ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது குறைய தொடங்கியது.

ஆனாலும் இப்பொழுதும் இவர் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். 43 வயதை அடைந்துள்ள அனுஷ்கா இப்பொழுது வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. அவரும் நடிகர்  பிரபாஸும் காதலித்ததாக முன்பு பேச்சுக்கள் இருந்து வந்தன.

ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த நிலையில் தன்னுடைய பால்ய காதல் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் அனுஷ்கா. அதில் அவர் கூறும் பொழுது நான் ஆறாவது படிக்கும் போது ஒரு மாணவன் வந்து என்னை காதலிப்பதாக கூறினான்.

என்மேல் உயிரையே வைத்திருப்பதாக அவன் கூறினான். அப்பொழுது எனக்கு காதல் என்றால் என்ன என்று கூட தெரியாது இருந்தாலும் நான் சரி என்று ஒப்புக்கொண்டேன் அதை இப்பொழுதும் ஒரு இனிய நினைவாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார் அனுஷ்கா.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version