சந்தானம் கூட எல்லாம் நடிக்க முடியாது.. பிரபல நடிகை மறுக்க இதுதான் காரணம்.!
நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி இப்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். சந்தானம் நடிக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.
முக்கியமாக சந்தானம் நடிக்கும் பேய் படங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில் தற்சமயம் டிடி நெக்ஸ் லெவல் திரைப்படம் தயாராகி வருகிறது. நடிகர் ஆர்யாதான் இந்த படத்தை தயாரிக்கிறார்.
நடிகர் கௌதம் மேனன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மே 16 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சந்தானத்திற்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிகை கஸ்தூரி நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் அம்மா கதாபாத்திரம் என்றதும் கஸ்தூரி நடிக்க முடியாது என கூறிவிட்டார். சந்தானத்திற்கு அம்மாவாக நடிக்கும் அளவிற்கு வயதாகவில்லை என கூறிவிட்டார். பிறகு அந்த அம்மா கதாபாத்திரம் குறித்து விவரித்த பிறகு அவர் நடிக்க ஒப்புக்கொண்டார்.
கஸ்தூரியின் கதாபாத்திரமானது திரைப்படத்தில் எதிர்பாராத திருப்பங்களை உருவாக்கும் என கூறுகிறார் சந்தானம்.