Connect with us

20 ஆண்டுக்கால சட்ட போராட்டம்!,, இறுதியில் ஜெயித்த கவுண்டமணி!.. வெளிவந்த தீர்ப்பு!.

gaundamani

Latest News

20 ஆண்டுக்கால சட்ட போராட்டம்!,, இறுதியில் ஜெயித்த கவுண்டமணி!.. வெளிவந்த தீர்ப்பு!.

cinepettai.com cinepettai.com

Gaundamani : வெகு காலங்களாகவே நடிகர் கவுண்டமணி சொத்து தொடர்பான ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொண்டுள்ளார். இந்த நிலையில் அந்த பிரச்சனையில் அவருக்கு இறுதியாக தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

1996 இல் கோடம்பாக்கம் அருகில் உள்ள ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடமிருந்து பெரும் அளவில் நிலத்தை வாங்கியிருந்தார் கவுண்டமணி. அந்த இடத்தில் வணிக வளாகத்தை கட்டி அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பது கவுண்டமணியின் ஆசையாக இருந்தது.

எனவே ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்னும் கட்டுமான நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை போட்டு அங்கு வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டித் தருமாறு கேட்டு இருந்தார் கவுண்டமணி.

மொத்தமாக 22,700 சதுர அடி பரப்பிலான அளவில் வணிக வளாகம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதை கட்டுவதற்கு மொத்தமாக மூன்று கோடியே 58 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே ஒரு கோடியே 4 லட்சம் ரூபாயை கவுண்டமணி செலுத்தி இருந்தார்.

நீதிமன்றத்தில் வந்த தீர்ப்பு:

இந்த நிலையில் இந்த கட்டுமான நிறுவனம் நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் கூட கட்டுமான வேலையை துவங்காமலேயே இருந்தன. இதனை அடுத்து 2003 ஆம் ஆண்டு கவுண்டமணி இது குறித்து சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் .

இந்த வழக்கில் 46 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே கட்டுமான பணிகள் நடத்தப்பட்டு இருக்கின்றன என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து கவுண்டமணியின் இடத்தை அவரிடமே திரும்ப அந்த நிறுவனம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மேலும் 2008 ஆகஸ்ட் முதல் சொத்தை திரும்ப தராத ஒவ்வொரு மாதமும் ஒரு லட்ச ரூபாயை இழப்பீடாக அந்த நிறுவனம் கவுண்டமணிக்கு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

2021 இல் விண்ணப்பிக்கப்பட்ட இந்த மேல்முறையீட்டுக்கு தற்சமயம் தீர்ப்பு வந்துள்ளது அதில் கூறிய நீதிபதிகள் இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்திருக்கின்றனர். எனவே கவுண்டமணியிடம் பெறப்பட்ட நிலத்தை திரும்பத் தரவேண்டும் அதே சமயம் இதுவரை உள்ள நஷ்ட ஈடு தொகையையும் சேர்த்து தர வேண்டிய நிர்பந்தத்தில் அந்த கட்டுமான நிறுவனம் உள்ளது.

இவ்வளவு பெரிய பணக்காரர்கள் நடிகர்களுக்கே இவ்வளவு தாமதமாகதான் தீர்ப்பு கிடைக்கும் என்றால் நம் நிலை என்ன என்பதே மக்களின் குறையாக உள்ளது.

POPULAR POSTS

To Top