News
பீஸ்ட் வேணாம்.. கேஜிஎஃப்தான் வேணும்! – அதிகரிக்கும் தியேட்டர்கள் எண்ணிக்கை!
இன்று யஷ் நடித்த கேஜிஎஃப் 2 வெளியான நிலையில் படத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால் திரையரங்குகள் அதிகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீண்ட காலமாக எதிர்பார்ப்பில் இருந்த யஷ் நடித்த கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது. முதல் காட்சியிலேயே பாஸிட்டிவ் ரியாக்ஷன்கள் பற்றிக் கொள்ள இந்த வாரம் முழுவதற்கும் கேஜிஎஃப் வேகமாக புக்கிங் ஆகி வருகிறது.
பல திரையரங்குகளில் முன்பதிவு முடிந்துள்ள நிலையில் 4 காட்சிகளாக இருந்த திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. ரோகிணி திரையரங்கு இந்த வார இறுதி வரை 8 காட்சிகள் கேஜிஎஃப் 2 திரையிடுகிறது.
மேலும் பல திரையரங்குகள் பீஸ்ட் படத்தின் காட்சியை குறைத்து கேஜிஎஃப் 2க்கு காட்சிகளை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது 300+ திரையரங்குகளில் திரையிடப்படும் கேஜிஎஃப் வரும் நாட்களில் மேலும் பல திரையரங்குகளில் திரையிடப்படலாம்.
