துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் வாரிசு இயக்குனர்! – இது என்ன புது க்ராஷ் ஓவரா இருக்கு?

தற்சமயம் சினிமாவையே ஒரு பெரும் போட்டிக்குள் தள்ளி இருக்கும் இரண்டு திரைப்படங்கள் துணிவு மற்றும் வாரிசு. அஜித்திற்கு விஜய்க்கும் இதுவரைக்கும் இல்லாத அளவில் போட்டியாக சென்றுக்கொண்டுள்ளது.

வாரிசு படமும் துணிவு படமும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகலாம் என பேச்சு உள்ளது. ஆனால் பாடல்களை வெளியிடுவதில் துவங்கி, பட ட்ரைலர் வெளியிடுவது வரை இரண்டு திரைப்படங்களுக்குமே பயங்கரமான போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தின் பட வெளியீட்டை 777 ஸ்டுடியோ லலித் வாங்கியுள்ளார். சென்னை மற்றும் சில இடங்களில் மட்டும் அதன் வெளியீட்டை உதயநிதி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதே போல துணிவு படத்தின் வெளியீட்டை உதயநிதி வாங்கியுள்ளார். வாரிசு படம் தெலுங்கில் வெளியாவதால் துணிவு படமும் தெலுங்கில் வெளியாகிறது. துணிவு படத்தை தெலுங்கில் தயாரிப்பாளர் தில்ராஜ் வெளியிடுகிறார்.

தில்ராஜ்தான் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் ஆவார். மேலும் வாரிசு படத்தையும் இவர்தான் தெலுங்கில் வெளியிடுகிறார். இதனால் இவர் துணிவை விட வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகளை ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளது என பேசப்படுகிறது.

Refresh