பொண்ணுங்கள விட ஆண்களை புரிஞ்சிக்கிறதுதான் கஷ்டம் – ஆண்கள் பற்றி த்ரிஷாவின் முடிவு

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை வெகு காலத்திற்கு பிரபலமாக இருப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும். ஏனெனில் நடிகர்கள் அளவிற்கான மார்க்கெட் நடிகைகளுக்கு இருப்பதில்லை.

ஆனாலும் பல வருடங்களாக கதாநாயகியாகவே வலம் வரும் ஒரு நடிகை த்ரிஷா. இன்னும் தனது நடிப்பில் எந்த குறையும் இல்லை என்பதை பொன்னியின் செல்வன் படத்தில் வரும் குந்தவை கதாபாத்திரம் மூலம் நமக்கு காட்டியுள்ளார்.

அடுத்து தொடர்ந்து அஜித் மற்றும் விஜய் படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார். இது த்ரிஷாவிற்கு ஒரு ரீ எண்ட்ரி என்றே கூறலாம். முன்பொரு முறை த்ரிஷாவிடம் பேட்டியில் ஒரு முக்கியமான கேள்வியானது கேட்கப்பட்டது.

அதாவது ஆண்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு த்ரிஷா ”பொதுவாக பெண்கள் மனதை யாரும் புரிந்துக்கொள்ள முடியாது என சொல்லி கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் ஆண்களை புரிந்துக்கொள்வதுதான் கடினம் என நினைக்கிறேன்.

ஏனெனில் ஆண்கள் மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் ஒன்றை பேசுகிறார்கள்” என கூறியிருந்தார். எனவே ஆண்களை புரிந்துகொள்வது கடினமாக இருப்பதாக த்ரிஷா கூறினார்.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh