ஒரு பாட்டுக்காக 62 டேக் போனேன்..! – த்ரிஷாவிற்கு நடந்த சம்பவம்

பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிப்பவர்களுக்கு இனி குந்தவை என்றாலே த்ரிஷா நியாபகம்தான் வரும். அந்த அளவிற்கு குந்தவை கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார் த்ரிஷா.

சினிமாவுக்கு வந்த ஆரம்பக்கட்டம் முதல் இப்போது வரை த்ரிஷாவிற்கு ஒரு பெரும் ரசிக வட்டாரம் உண்டு. அவர் முதன் முதலாக கதாநாயகியாக நடித்த படம் லேசா லேசா திரைப்படமாகும். அந்த திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பழைய பேட்டி ஒன்றில் த்ரிஷாவிடம் நீங்கள் நடித்ததிலே அதிகமாக டேக் போன காட்சி எது என கேட்டனர். அப்போது த்ரிஷா கூறும்போது அவரது முதல் படமான லேசா லேசா படத்தில் ஒரு பாடலில் குறிப்பிட்ட காட்சிக்காக 62 முறை டேக் சென்றதாக கூறினார்.

இப்போது த்ரிஷா பெரும் நடிகையாக ஆனதற்கு அந்த 62 டேக்குகள் கூட காரணமாக இருக்கலாம்.

Refresh