தமிழ் சினிமாவில் அதிக புகழ் பெற்ற ஒரு காமெடி நடிகர் என்றால் நடிகர் வடிவேலுவை கூறலாம். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்து ஒரு வெற்றிகரமான காமெடியனாக பல வருடங்களாக இருந்து வந்துள்ளார் வடிவேலு.
ஆனால் வடிவேலு குறித்து நிறைய எதிர்மறையான விமர்சனங்களும் தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. வடிவேலுவுடன் பணிபுரிந்தவர்களில் நிறைய பேர் வடிவேலு மிகவும் தலைகணமாக நடந்து கொள்வதாக பேட்டிகளில் கூறியிருக்கின்றனர்.
முக்கியமாக விஜயகாந்த் குறித்து அவதூறுகளை பரப்பிய பிறகு வடிவேலுவிற்கு இருந்த நற்பெயர் என்பது சினிமாவில் கெட்டுவிட்டது என்று கூறவேண்டும். அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து தான் அவர் சினிமாவில் வந்து நடிக்கவே முடிந்தது.
இந்த நிலையில் ஏன் வடிவேலு இப்படியான ஒரு கேரக்டராக இருக்கிறார் என்று அவருக்கு பட வாய்ப்புகளை கொடுத்த இயக்குனர் வி சேகர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அவர் கூறும் பொழுது வடிவேலுவின் வளர்ச்சி என்பது தமிழ் சினிமாவில் வெகு சீக்கிரத்திலேயே நடந்தது.
அவர் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு கைகட்டி வந்து ஒரு காலத்தில் நின்றார் ஆனால் பிறகு சீக்கிரத்திலேயே ஒரு லட்சம், 10 லட்சம், ஒரு கோடி என்று அவருடைய சம்பளம் அதிகரித்தது. சினிமாவிற்கு வருவதற்கு கஷ்டப்பட்டு நிறைய அனுபவித்து பிறகு பட வாய்ப்புகளை பெற்று மெதுவாக வளர்ச்சி அடைந்திருந்தால் அவர்களுக்கு தலைகணம் இருக்காது.
ஆனால் வடிவேலுவிற்க்கு சினிமா வாய்ப்புகள் வந்ததிலிருந்து அவர் பெற்ற வளர்ச்சி வரை எல்லாமே அவருக்கு எளிதாக நடந்து விட்டது அதனால் தான் அவர் அப்படி இருக்கிறார் என்று கூறி இருக்கிறார் வி சேகர்.