என் கல்யாணத்துக்கு காசு கொடுத்து உதவியவர் வடிவேலு!.. மனமுருகி கூறிய நடிகர்…

தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல காலங்களாக இவர் நகைச்சுவையாளராக இருந்துள்ளார். அவர் அளவிற்கு எந்த காமெடி நடிகரும் தமிழ் சினிமாவில் அதிக காலங்கள் காமெடி செய்யவில்லை என கூறலாம்.

ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அது வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளையே இழந்தார்.

தற்சமயம் மீண்டும் திரைப்படங்களில் எல்லாம் நடிக்க துவங்கியுள்ளார் வடிவேலு. ஆனால் வடிவேலு அவர் கூட நடித்தவர்களுக்கு நிறைய கொடுமைகள் செய்ததாக சிலர் பேட்டிகளில் கூறுவதை கேட்க முடிகிறது. ஏனெனில் வடிவேலு அவருக்கென ஒரு கூட்டத்தை வைத்திருந்தார். அவர்களை எப்போதும் வடிவேலுவின் காமெடியில் பார்க்க முடியும்.

அவர்களுக்கு தற்சமயம் வடிவேலு வாய்ப்புகளும் அளிப்பதில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் அம்பானி சங்கர் வடிவேலு குறித்து ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார். அம்பானி சங்கர் அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படம் மூலமாக பிரபலமானவர்.

இவர் ஒருமுறை இவரது திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக வடிவேலுவை பார்க்க சென்றுள்ளார். அப்போது ஒரு சின்ன பையை வடிவேலு கொடுத்துள்ளார். சரி அதில் ஏதாவது பரிசு இருக்கும் என நினைத்துள்ளார் சங்கர். ஆனால் பிறகுதான் தெரிந்துள்ளது வடிவேலு அவரது திருமணத்திற்காக 10,000 ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.