News
துணிவை ப்ரேக் செய்யுமா வாரிசு? – அதிகரித்த திரையரங்குகள்!
அஜித் மற்றும் விஜய் போட்டி போடும் விதத்தில் நேற்று வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் வெளியாகின. சம்பள அளவை பொறுத்தவரை விஜய்யை விட நடிகர் அஜித்தான் அதிக சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று உலக அளவில் வசூலில் வலிமை முன்னிலையில் இருந்தது. ஆனால் சென்னையில் வாரிசு படமே அதிக வசூலை பெற்றிருந்தது. இத்தனைக்கும் துணிவு படம் நேற்று ஒரு காட்சி அதிகமாக பெற்று இரவு 1 மணி சிறப்பு காட்சிகளுடன் வெளியானது.
அப்படியிருந்தும் சென்னையில் வாரிசு முன்னிலையில் இருந்ததால் தற்சமயம் வாரிசு திரைப்படத்திற்கு வரவேற்பு கூடி வருகிறது. நேற்று வாரிசை வாங்காத பல திரையரங்குகள் இன்று வாரிசு படத்தை வாங்கியுள்ளன என கூறப்படுகிறது.
ஆனால் ஒரு வாரம் படம் ஓடிய பிறகுதான் எந்த படம் முன்னிலையில் உள்ளது என்பதை முடிவு செய்ய முடியும். எனவே ஒரு நாள் வசூலை வைத்து எந்த முடிவையும் எடுக்க முடியாது என சினி துறையினர் கூறுகின்றனர்.
