மீண்டும் தேதி மாற்றமடைந்த வாரிசு ட்ரைலர்! –  ஏமாற்றத்தில் ரசிகர்கள்?

விஜய் நடித்த வாரிசு, அஜித் நடிக்கும் துணிவு இரண்டு திரைப்படங்களுமே பெரும் போட்டியுடன் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றன. இந்த நிலையில் அனைத்து அப்டேட்களிலும் வாரிசு திரைப்படம் முன்னிலை வகித்து வந்தது.

முதல் போஸ்டரில் துவங்கி, முதல் சிங்கிள் பாடல் விடுவது வரை அனைத்தையும் முதலில் வெளியிட்டது வாரிசு படக்குழுதான். தற்சமயம் சில நாட்களுக்கு முன்பு வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடந்தது.

இந்த நிலையில் படத்தின் ட்ரைலரை வெளியிடுவதில் மட்டும் துணிவு வாரிசை முந்திக்கொண்டு கடந்த டிசம்பர் 31 அன்று ட்ரைலரை வெளியிட்டது.

முதலில் அதே தேதியில்தான் வாரிசு படத்தின் ட்ரைலரும் வர இருந்தது. ஆனால் அவர்கள் அதை ஜனவரி 1 ஆம் தேதி வெளியிடலாம் என தீர்மானித்தனர். பிறகு மீண்டும் தேதியை மாற்றம் செய்து இன்று ஜனவரி 2 ஆம் தேதி ட்ரைலர் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.

ரசிகர்களும் ட்ரைலரை காண ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் மீண்டும் தேதியை மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. வருகிற நான்காம் தேதிதான் வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகும் என கூறப்படுகிறது.

Refresh