10 லட்சம் வீவ்களை தொட்ட தளபதி தீ – வைப் மூடை கிளப்பிய எஸ்.டி.ஆர்

வாரிசு படம் குறித்து வேற லெவல் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாய் அதன் இரண்டாம் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

தளபதி தீ என்னும் இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். சிம்பு பாடியுள்ளார் என்பதே இதில் சிறப்பு அம்சம் ஆகும். பொதுவாக இந்த மாதிரி நடிகர்கள் பாடியிருந்தால் ஸ்டுடியோவில் மைக்கை வைத்து பாடுவது போல பாடல் அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த பாடலுக்கு பிரத்யேகமாக ஒரு செட் போட்டு செட் முழுக்க நெருப்பை பறக்கவிட்டு பாடியுள்ளார் எஸ்.டி.ஆர் மேலும் இசையமைப்பாளர் தமண், நடன கலைஞர் சாண்டி மாஸ்டரும் இந்த பாடலில் கலந்துக்கொண்டுள்ளனர்.

கிட்டத்தட்ட ஒரு வைப் மோடை ஏற்படுத்தியுள்ளது இந்த பாடல். யூ ட்யூப் தளத்தில் வெளியாகி ஒரு நாள் ஆவதற்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் வீவ்களையும், 1 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது இந்த பாடல்.

தளபதி தீ பாடலை காண இங்கு க்ளிக் செய்யவும்.

Refresh