News
கார்த்தி எப்ப வருவாரு? வாசலில் காத்துக் கிடந்த பாலிவுட் நடிகர்!
தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்தி. தொடர்ந்து பையா, சிறுத்தை என பல ஹிட் படங்களில் நடித்து வந்தவர் இடையே சில சுமார் படங்களிலும் நடித்து வந்தார்.

தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேடித் தேடி நடிப்பதால் கார்த்தியின் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருகின்றன. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கார்த்தியின் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளது.
கார்த்தியின் புகழ் பாலிவுட் வரை பரவியுள்ளது. சமீபத்தில் ஒரு விளம்பர படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ளார் கார்த்தி. அங்கு வேறொரு படப்பிடிப்பு பணிக்காக பாலிவுட் இளம் நடிகர் வருண் தவான் சென்றுள்ளார். கார்த்தி வந்திருப்பதை அறிந்த வருண் தவான் அவரை பார்ப்பதற்காக ஷெட் வாசலிலேயே காத்திருந்தாராம்.
கார்த்தி வெளியே வந்ததும் அவருடன் பேசியவர், அவரது கைதி படம் தனக்கு பிடிக்கும் என கூறி செல்பியும் எடுத்துக் கொண்டாராம். தற்போது கைதி படம் இந்தியிலும் ரீமேக்காகி வருவது குறிப்பிடத்தக்கது.
