ரஜினிக்கு போடுற மாதிரி ஒரு பாட்டு வேணும்.. அனிரூத் ஸ்டைலில் பாடல் எழுதிய கங்கை அமரன்..!
இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் மகன்தான் வெங்கட் பிரபு. வெங்கட் பிரபு சினிமாவிற்கு தன்னுடைய சினிமா பின்புலத்தை பயன்படுத்தி வரவில்லை.
மாறாக மற்ற இயக்குனர்கள் போலவே வேறு சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் மூலமாக தான் இயக்குனரானார் வெங்கட் பிரபு.
வெங்கட் பிரபு முதல் திரைப்படமான சென்னை 600028 திரைப்படம் எக்கச்சக்கமான வெற்றியை கொடுத்தது. வெங்கட் பிரபுவுக்கு மட்டுமல்லாமல் அந்த படத்தில் நடித்த பல நடிகர்களை அதற்கு பிறகு வளர்ந்து வந்ததற்கு சென்னை 28 திரைப்படம் முக்கிய காரணமாக இருந்தது.
இந்த நிலையில் அந்த படத்தில் ஒரு காட்சியை குறித்து வெங்கட் பிரபு சமீபத்தில் விளக்கி இருக்கிறார். ஜெய் வீடு குடி மாரி புதிய ஏரியாவிற்கு வரும்பொழுது அவருக்கு என்று ஒரு பாடல் எழுதப்பட்டிருந்தது.
அந்த பாடல் ரஜினி கமல் மாதிரியான பெரிய நடிகர்களுக்கு எழுதப்படும் வகையில் இருக்க வேண்டும் என்று நான் பிரேம்ஜியிடம் கூறினேன். உடனே பிரேம்ஜி ஒரு இசையை அமைத்து கொடுத்தான் அதை எனது அப்பா விடம் கொடுத்து பாடல் வரிகளை எழுதி வாங்கினேன். அந்த பாடலும் மிகப் பிரபலம் அடைந்தது என்று கூறி இருக்கிறார் வெங்கட் பிரபு.