News
குலசாமி கோவிலில் பொங்கல் வைக்க போன நயன்தாரா ! – வைரல் ஆன வீடியோ
தமிழ் திரையுலகில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயமே. தற்சமயம் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கூட விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படமே.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருமே வெகு காலமாக காதலித்து வருகின்றனர். இன்னும் சிறிது நாட்களில் இவர்களில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போவதாக பேச்சுக்கள் உள்ளன. முதலில் ரகசியமாக காதலித்து வந்த இருவரும் பிறகு ஒன்றாக ஊர் சுற்றுவது, புகைப்படம் வெளியிடுவது என தாங்கள் காதலித்து வருவதை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கும்பகோணம் பாபநாசத்தில் உள்ள வழுத்தூர் என்னும் கிராமத்தில் ஒரு கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டுள்ளனர். அநேகமாக ஏதாவது நேர்த்திகடனுக்காக அவர்கள் அந்த கோவிலுக்கு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்சமயம் வைரல் ஆகி வருகிறது.
