காலம் காலமா எடுத்த அதே கதை.. உளவாளியாக விஜய் தேவரகொண்டா.. கிங்டம் ட்ரைலர் வெளியானது..!

நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு மற்றும் தமிழ் என்று இரண்டு மொழியில் மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருகிறார் பேமிலி ஸ்டார் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தேவர கொண்டா தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் எல்லாம் வித்தியாசமான படங்களாக இருக்கின்றன.

அந்த வகையில் அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் கிங்டம். ஆனால் கிங்டம் திரைப்படத்தின் கதைகளம் ஒரே மாதிரி இருப்பது தெரிகிறது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

படத்தின் கதைப்படி விஜய் தேவாரகொண்டா ஒரு உளவு வேலைக்காக உளவாளியாக ஒரு கேங்ஸ்டர் கும்பலிடம் சிக்குகிறார். போலீசாக இருக்கும் விஜய் தேவரகொண்டா இதற்காக ரவுடி வேஷத்தில் செல்கிறார்.

யாரிடம் செல்கிறார் என பார்க்கும் பொழுது அதை விஜய் தேவரகொண்டாவின் அண்ணன் தான். அவர் பெரிய ரவுடியாக இருந்து வருகிறார். இதே மாதிரி கதை அமைப்பில் ஏற்கனவே நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன.

தம்பி கதாபாத்திரம் சென்று ரவுடியாக இருக்கும் அண்ணனை திருத்துவது போல கதைக்களம் இருக்கும். ஏற்கனவே தமிழில் வந்தான் வென்றான், தோரணை மாதிரியான திரைப்படங்களின் கதைகளம் இப்படித்தான் அமைந்திருக்கும் இப்படி பல படங்கள் வந்த நிலையில் மீண்டும் அதே கதைக்களத்தை கையில் எடுத்திருக்கின்றனர் கிங்டம் பட குழுவினர்.