நடிகர் விஜய் பல இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்புகளை கொடுத்து இருக்கிறார். அப்படியான அவரிடம் வாய்ப்புகளை பெற்ற அப்பச்சி என்கிற தயாரிப்பாளர் அவரை வைத்து திரைப்படம் தயாரித்த அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் கூறும் பொழுது விஜய் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தை நான்தான் தயாரித்தேன். அந்த திரைப்படம் வெளியாகும் அதே சமயத்தில் நடிகர் அஜித் நடித்த தீனா மற்றும் நடிகர் விஜயகாந்த் நடித்த வாஞ்சிநாதன் ஆகிய திரைப்படங்கள் வெளியானது.
வெளியான முதல் இரண்டு நாட்களுமே பிரண்ட்ஸ் திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. தீனா திரைப்படமும் வாஞ்சிநாதன் திரைப்படமும்தான் நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய் என்னிடம் வந்து கண்டிப்பாக பிரண்ட்ஸ் திரைப்படம் தோல்வி திரைப்படம் தான் என்று கூறினார். அப்பொழுது நான் கூறினேன் இது சனி ஞாயிறு இந்த இரண்டு நாட்களை விட்டு விடுங்கள் திங்கள்கிழமை தான் நமக்கான ஆடியன்ஸ் வருவார்கள்.
அதற்கு பிறகு பிரண்ட்ஸ் திரைப்படம்தான் நன்றாக ஓடும் பிரெண்ட்ஸ் திரைப்படம் ஒழுங்காக ஓடவில்லை என்றால் இந்த துறையை விட்டு நான் சென்று விடுகிறேன் என்று கூறினேன்.
அதே மாதிரி திங்கட்கிழமைக்கு பிறகு பிரண்ட்ஸ் திரைப்படம் அதிக ரசிகர்களை ஈர்க்க துவங்கியது. கிட்டத்தட்ட நிறைய திரையரங்குகளில் 100 நாட்கள் வரை ஓடியது. அதற்கு பிறகு விஜய் வைத்து நான் தயாரித்த திரைப்படம் அழகிய தமிழ் மகன்.
அந்த திரைப்படத்தை தயாரிக்கும் பொழுது விஜய் என்னிடம் ஒன்று கூறினார். ஏ ஆர் ரகுமான் இசையில் நடனம் ஆட வேண்டும் என்பது எனக்கு ரொம்ப நாள் ஆசை என்று விஜய் கூறினார்.
எனவே அவருக்காக ஏ ஆர் ரகுமானிடம் பேசினேன் அப்பொழுது தமிழ் திரைப்படங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வாங்கி வந்த ஏ ஆர் ரகுமான் எங்களுக்காக 25 லட்சம் குறைத்து சம்பளம் வாங்கிக் கொண்டார்.
அப்பொழுது ஏ ஆர் ரகுமான் போட்டு கொடுத்த முதல் பாடல் விஜய்க்கு பிடிக்கவில்லை அதை அவர் மாற்ற வேண்டும் என்று கூறினார். இதை ஏ ஆர் ரகுமானிடம் கூறினால் அவர் கோபப்படுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் எந்த ஒரு பேச்சும் பேசாமல் அடுத்து ஒரு புது பாடலை எழுதிக் கொடுத்தார். அதுதான் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே என்கிற அந்த முதல் பாடல் என்ற இந்த விஜய் குறித்து தகவல்களை பகிர்ந்து இருக்கிறார் அப்பச்சன்.