இதை எதிர்ப்பார்க்கலைல.. அதிகாலையில் நடந்த சம்பவம்… தா.வெ.க மாநாடு..! இப்ப தெரிஞ்சிருக்கும்..!

நடிகர் விஜயின் அரசியல் நகர்வை தொடர்ந்து அடுத்தடுத்து விஜய் என்ன செய்யப் போகிறார் என்பது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டி வரும் விஷயமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய்யின் முக்கிய அரசியல் நகர்வாக அவரின் மாநாடு இருந்து வருகிறது. விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் இன்று விஜய்யின் முதல் அரசியல் மாநாடு நடக்க இருக்கிறது.

இந்த மாநாட்டில்தான் விஜய் தனது அரசியல் கட்சி கொள்கைகள் குறித்த விஷயங்களை வெளியிட இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் வெளியிட்ட கொடியின் அர்த்தம் என்ன என்பதையும் இந்த மாநாட்டில்தான் கூற இருக்கிறார் விஜய்.

 

தா.வெ.க மாநாடு:

இந்த நிலையில் தற்சமயம் அரசியல் தளம் சூடு பிடித்தது பெரும்பாலும் விஜய்க்கு ஆதரவு என்பது பெரிதாக இருக்காது என்பது தான் அரசியல் கட்சி தலைவர்களின் நம்பிக்கையாக இருந்தது. எனவே இவர்களுக்கு மத்தியில் தனக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு என்ன என்பதை விஜய் காட்ட வேண்டும் என்கிற அவசியம் இருந்தது.

ஆனால் இன்று அதிகாலையில் இருந்தே விஜய்யின் மாநாட்டிற்கு மக்கள் கூட்டமாக வர துவங்கியிருக்கின்றனர். இது அரசியல் கட்சிகள் பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்திருக்கிற.து இப்போதுதான் உண்மையிலேயே விஜய் யார் என்பது மற்றவர்களுக்கு தெரிய துவங்கியிருக்கிறது என்று விஜய் ரசிகர்கள் இது குறித்து கூறி வருகின்றனர்.