Connect with us

விஜயகாந்தே இருந்தும் விசித்திராவுக்கு ஒரு சதவீதம் கூட உதவி பண்ணல!.. மனம் வருந்திய விசித்திரா கணவர்!.

vichitra vijayakanth

Cinema History

விஜயகாந்தே இருந்தும் விசித்திராவுக்கு ஒரு சதவீதம் கூட உதவி பண்ணல!.. மனம் வருந்திய விசித்திரா கணவர்!.

cinepettai.com cinepettai.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்பு எர்த் குவாக் டாஸ்க்கில் அனைவரையும் அவர்களது வாழ்வில் நடந்த மோசமான சம்பவங்கள் குறித்து பேசுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்படி பேசும்போது நடிகை விசித்திரா ஒரு தெலுங்கு படத்தில் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசியிருந்தார்.

இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதில் மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அப்படி தொல்லை கொடுத்தது தெலுங்கின் மிகப்பெரிய நடிகரும் அரசியல் வாதியுமான பாலக்கிருஷ்ணா என்பதும் தெரிந்தது. பொதுவாக பெண்களுடன் மிகவும் கவர்ச்சியாக நடிக்க கூடியவர் பாலகிருஷ்ணா.

இந்த நிலையில் அந்த படத்தில் தனக்கு நடந்த பிரச்சனையை பலரிடமும் கூறியும் யாரும் நடவடிக்கை எடுக்காததால் தமிழ் சினிமாவை விட்டே விலகிவிட்டார் விசித்திரா. இந்த நிலையில் இதுக்குறித்து அவரின் கணவரான ஷாஜியிடம் கேட்கப்பட்டது.

இந்த நிகழ்வு நடந்த சமக்காலத்தில் தமிழ் திரைப்பட சங்கத்தின் தலைவராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் அவரும் கூட இதற்கு உதவவில்லை. நடிகர் சங்கம் ஒரு சதவீதம் கூட இதற்காக உதவவில்லை என கூறியுள்ளார் விசித்திராவின் கணவர்.

இதுக்குறித்து நெட்டிசன்கள் பேசும்போது வேறு மாநிலத்தில் நடக்கும் பிரச்சனை நடிகர் சங்கத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது, மேலும் ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான என்.டி ராமாராவின் பையன் தான் பாலகிருஷ்ணா. அவரை எப்படி விஜயகாந்தால் எதிர்க்க முடியும் என்று கூறுகின்றனர்.

விசித்திராவின் கணவரும் கூட கூறும்போது நடிகர் சங்கம் அந்த நிகழ்விற்கு ஆதரவாக இருந்ததாக கூறவில்லை. நடந்த விஷயம் தவறுதான் ஆனால் அதை கெட்ட கனவாக மறந்துவிடுங்கள் என்றுதான் அவர்கள் அறிவுறுத்தியதாக கூறியுள்ளார். ஒருவேளை அப்போது விஜயகாந்த் அரசியலில் பெரும்புள்ளியாக இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் என்று கூறுகின்றனர் விஜயகாந்த் ரசிகர்கள்.

POPULAR POSTS

lion king mufasa
vijay dhamu
malavika mohanan
ram charan rajinikanth
ns krishnan mr radha
vishal bailwan ranganathan
To Top