வாய்ப்பு வாங்கி தரேன் வா!.. தினமும் விஜயகாந்தை அழைத்து சென்ற இயக்குனர்!.. நடுவில் புகுந்து காரியத்தை கெடுத்த நடிகர்!..

Vijayakanth : தமிழ் சினிமாவில் பெரும் நடிகர் ஆவதற்கு முன்பு விஜயகாந்த் வாய்ப்பை பெறுவதற்காக பலமுறை ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் ஏறி இறங்கி வந்தார்.

விஜயகாந்த் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த காலத்திலேயே பாக்கியராஜ் பெரும் இயக்குனராக மாறியிருந்தார். பாக்யராஜிடம் கூட விஜயகாந்த் வாய்ப்புகள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அப்போது இருந்த யாரும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் தராததால் திரைத்துறையில் அப்பொழுது இருந்த சின்ன சின்ன நடிகர்களிடம் தனக்காக இயக்குனர்களிடம் பரிந்து பேசும்படி கேட்டுக் கொண்டிருந்தார் விஜயகாந்த்.

அப்போது விஜயகாந்திற்கு உதவி செய்து வந்தவர்தான் நடிகர் செம்புலி ஜெகன். நடிகர் செம்புலி ஜெகன் நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்திருக்கிறார். அவர் விஜயகாந்திற்காக பல திரைப்படங்களில் சென்று வாய்ப்புகள் கேட்டிருக்கிறார்.

அதனால் விஜயகாந்த் சினிமாவில் பிரபலமான பிறகு செம்புலி ஜெகனுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் பி.ஏ பாலகுரு இயக்கத்தில் உருவான கன்னி பருவத்திலே என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு விஜயகாந்திற்கு கிடைத்தது. அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் ராஜேஷ் நடித்த அந்த கதாபாத்திரத்தில் முதலில் விஜயகாந்த்தே நடிக்க இருந்தார்.

இதற்காக இயக்குனர் பி.ஏ பாலகுருவே தயாரிப்பாளரிடம் பரிந்துரை செய்தார். ஆனால் அந்த படத்தில் திரைக்கதையிலும் படத்திலும் பணிபுரிந்த நடிகர் பாக்கியராஜ். ராஜேஷ் அந்த கதாபாத்திரத்தில் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று கூறியதால் தயாரிப்பாளர் விஜயகாந்த்தை நிராகரித்துவிட்டார். இல்லை என்றால் விஜயகாந்த் அந்த திரைப்படத்தில்தான் அறிமுகமாகி இருப்பார் இந்த விஷயத்தை செம்புலி ஜெகன் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.