
பிரபல தமிழ் நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான “பத்தல.. பத்தல..” தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது கமல்ஹாசன் அரசியலிலும் ஈடுபட்டு வருவதால் முதல் சிங்கிள் பாடலில் அரசியல் கருத்துகள் இருக்கும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே பாடலின் இடையே சில வரிகளை சொருகியுள்ளார் ஆழ்வார்பேட்டை ஆண்டவர்.

பாடலின் இடையே “ஒன்றியத்தின் தப்பாலே.. ஒன்னும் இல்ல இப்பாலே.. சாவி இப்போ திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே” என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. அதுபோல மறைமுகமான அரசியல் பகடிகளும் பல இடம்பெற்றுள்ளது. “ஆண்டவரே நீ ஏத்தி பாடு” என்னும் வரிகள் கமலை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
கமல்ஹாசனின் குரல் மற்றும் வரிகளில், அனிருத் இசையில் பாடல் மனதுக்கு நிறைவாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.