நீ தைரியமா இரு.. நான் இருக்கேன்.. தொகுப்பாளினி சப்போர்ட்டாக வந்த நடிகர் விஷால்..!

சமீபத்தில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி குறித்த சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் அதிக வைரலாகி வந்தது. நிறைய சினிமா தொடர்பான விழாக்களை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

மேலும் சில குறும்படங்கள் போன்றவற்றிலும் நடித்து வருகிறார் நடிகை ஆவதற்கும் இவர் முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் ஒரு படத்தின் விழாவில் தொகுத்து வழங்கி வந்த பொழுது அவரிடம் அங்கிருந்த பத்திரிகையாளர் நீங்கள் அணிந்திருக்கும் உடை கோடைகாலத்திற்கு ஏற்ற உடையா? என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

அதற்கு அப்பொழுது ஐஸ்வர்யா ரகுபதி விடை அளிக்கவில்லை. ஆனால் பிறகு ஒரு மேடையில் அவர் பேசும் பொழுது ஒரு பத்திரிகையாளர் அப்படியான ஒரு மோசமான கேள்வியை கேட்கும் பொழுது திரை துறையை சேர்ந்த யாருமே ஏன் அது குறித்து எனக்கு ஆதரவாக பேசவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

Social Media Bar

அந்த பத்திரிகையாளர் ஸ்லீவ்லஸ் உடையை வெயிலுக்கு காற்றோட்டமாக அணிந்து வந்திருக்கிறேன் என்கிற போக்கில்தான் அந்த கேள்வியை கேட்டார் ஆனால் அவரை யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று மனம் வருந்தினார் ஐஸ்வர்யா ரகுபதி.

இந்த நிலையில் இது குறித்து மேடையில் பேசிய விஷால் கூறும் பொழுது உனக்கு பிடித்ததை நீ செய். உன்னிடத்தில் எந்த தவறும் இல்லை நான் உனக்கு சப்போர்ட்டாக இருக்கிறேன் என்று ஆதரவு கொடுத்திருக்கிறார்.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.