Bigg Boss Tamil
பூர்ணிமா பக்கம் நீ போகாமல் இருப்பதுதான் நல்லது!.. விஷ்ணுவின் குடும்பத்தினர் கொடுத்த எச்சரிக்கை!..
Vishnu and Poornima: பிக்பாஸ் துவங்கிய நாள் முதலே பூர்ணிமாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே ஏழாம் பொருத்தம் என்றுதான் கூற வேண்டும். இருவருக்கும் இடையே ஆரம்பம் முதலே சண்டை இருந்து வந்தது. இந்த நிலையில் இருவரும் வெகு வாரங்களாக எதிரிகளாக இருந்து வந்தனர்.
பிறகு சில வாரங்களுக்கு முன்பு விஷ்ணு பூர்ணிமாவிடம் மிகவும் மோசமாக நடந்துக்கொண்டது குறித்து வருத்தப்பட்டார். அவரே அதுக்குறித்து பூர்ணிமாவிடம் பேசினார். இதனையடுத்து பூர்ணிமாவும் விஷ்ணுவும் அடிக்கடி பேசிக்கொள்ள துவங்கினர்.
இதனால் மாயவிற்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. ஏனெனில் வீட்டிற்கு வந்த ஆரம்பக்கட்டம் முதலே மாயாவும் பூர்ணிமாவும் நல்ல நட்பில் இருந்தனர். ஆனால் இப்படி பூர்ணிமா விஷ்ணுவுடன் பழக துவங்கியதும் இவர்கள் நட்பில் சில வாரங்களாக விரிசல் ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் குடும்பத்தினரும் சேர்ந்து கலந்துக்கொண்டுள்ளனர். அதில் விஷ்ணுவின் குடும்பத்தினர் விஷ்ணுவிற்கு ஒரு அறிவுரை வழங்கியுள்ளார்.
மாயா மற்றும் பூர்ணிமாவின் நட்புதான் மக்களுக்கு பார்க்க பிடித்திருக்கிறது. நீ அதற்கு குறுக்கே போகாதே, பூர்ணிமாவை அவாய்ட் செய்வதுதான் நல்லது என்று அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார் பூர்ணிமாவின் சகோதரி.