Bigg Boss Tamil
அய்யய்யோ என்னை வச்சி செஞ்சுடுவாங்க!.. நான் கிளம்புறேன்.. பெட்டியை கட்டும் விஷ்ணு.. என்ன நடந்தது..
Bigboss Vishnu : போன வாரம் விஷ்ணு தலைமையில் பிக் பாஸில் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் கமலஹாசன் இடம் பேசும் பொழுதும் விஷ்ணு குறித்து தங்களது கருத்துக்களை முன்வைக்கும் போது போட்டியாளர்கள் பல விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த வாரம் விஷ்ணு கேப்டன் ஆக இல்லாத காரணத்தினால் அவருக்கு நிறைய டாஸ்க் கொடுப்பதற்கு போட்டியாளர்கள் தயாராக இருப்பதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. அனைவரையும் பகைத்துக் கொண்டதால் இந்த வாரம் விஷ்ணு தனித்துவிடப்பட்டு விட்டாரோ என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.
ஏனெனில் அவருக்கு ஆதரவாக இப்பொழுது யாரும் பேசுவது போல தெரியவில்லை. எனவே இந்த வாரத்திற்கான உணவுப் பொருட்களை எடுப்பதற்கு கூல் சுரேஷையும் விஷ்ணுவையும் அனுப்பி உள்ளனர் போட்டியாளர்கள்.
அங்கு சென்ற விஷ்ணு அனைத்து பொருட்களையும் எடுத்தாலும் சர்க்கரையை எடுக்க மறந்துவிட்டார். பஸ்சர் அடித்த காரணத்தினால் சர்க்கரை அவருக்கு கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் வெளியில் வந்த விஷ்ணுவிடம் சர்க்கரை இல்லாமல் கூட இந்த வார்த்தை ஓட்டி விடலாம் என்று கூல் சுரேஷ் ஆறுதலாக கூறினார்.
இல்லை வீட்டில் இருப்பவர்கள் என்னை வைத்து செய்து விடுவார்கள் நான் இந்த வாரத்தோடு கிளம்ப போகிறேன் என்றெல்லாம் பேசா துவங்கி இருக்கிறார் விஷ்ணு இதனால் கன்ஃபஷன் ரூமுக்கு அழைத்து பிக் பாஸ் அவருக்கு ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.