Special Articles
யுவன் சங்கர் ராஜா இசையில் எல்லா பாட்டுமே ஹிட் கொடுத்த படங்கள்..!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. காதல் தோல்வி அடைந்தவர்கள், காதலில் இருப்பவர்கள் என பலராலும் ரசிக்கப்படும் ஒரு இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என்றால் அது யுவன் சங்கர் ராஜா தான்.
பல இளைஞர்களின் காயத்திற்கு மருந்தாக இவரின் பாடல்கள் அமைவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் இசையமைத்த படங்களில் அனைத்து பாடல்களுமே வெற்றி பெற்ற படங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
பூவெல்லாம் கேட்டுப்பார்

சூர்யா, ஜோதிகா, நாசர், விஜயகுமார், வடிவேல் ஆகியோரின் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இந்த படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். “சிபிஐ என்ஜின், சுடிதார் அணிந்து வந்த, இரவா பகலா, பூத்தது, பூவ பூவ பூவே (பெண்), ஓ சம்யுரீட்டா, செவ்வானம் வெட்கம் கொண்டது, பூவ பூவ பூவே (ஆண்) ஆகிய பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றது.
தீனா 2001

அஜித், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தீனா. இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளிவந்தது. “என் நெஞ்சில் நீங்களானே, காதல் வெப்சைட் ஒன்று, நீ இல்லை என்றால், சொல்லாமல் தொட்டுச் செல்லும் மேகம், வத்திக்குச்சி பத்திக்காதடி “ஆகிய பாடல்கள் வெற்றி பெற்றது.
சண்டைக்கோழி 2005

விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கரன், சுமன் செட்டி, தலைவாசல் விஜய், கஞ்சா கருப்பு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். “என்னமோ நடக்கிறது, கும்தலக்கடி கானா, கேட்டா கொடுக்கிற பூமி, முண்டாசு சூரியனே, தாவணி போட்ட தீபாவளி ” ஆகிய பாடல்கள் வெற்றி பெற்றது.
7ஜி ரெயின்போ காலனி 2004

ரவி கிருஷ்ணா சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான திரைப்படம். இந்தப் படம் மொத்தம் பத்து பாடல்களைக் கொண்டுள்ளது. “நினைத்து நினைத்து பார்த்தால், கனா காணும் காலங்கள், நாம் வயதுக்கு, (மகிழ்ச்சியின் இசை), கண் பேசும் வார்த்தைகள், இது பொற்காலமா, ஜனவரி மாதம், (வாக்கிங் த்ரூ தி ரெயின்போ (தீம் மியூசிக்), இது என்ன மட்டும் ” ஆகிய பாடல்கள் வெற்றி பெற்றது.
புதிய கீதை 2003

இந்த படத்தில் விஜய், மீரா ஜாஸ்மின், அமிஷா பட்டேல், கலாபவன் மணி ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் ஆறு பாடல்கள் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். “நான் ஓடும் இளைஞன், மெர்குரி பூவே, வசியக்கார 1, மனசே, வசியக்கார 2, அண்ணாமலை ஆகிய பாடல்கள் வெற்றி பெற்றது.
காதல் கொண்டேன் 2003

நடிகர் தனுஷ் சோனியா அகர்வால் நாகேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் காதல் கொண்டேன். இந்த படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் யுவன் சங்கர் ராஜாவால் இசையமைக்கப்பட்டது. “தேவதையை கண்டேன், மனசு ரெண்டும், நெஞ்சோடு கலந்திடு, காதல் மட்டும் புரிவதில்லை, தொட்டு தொட்டு போகும், 18 வயதில், காதல் கொண்டேன் (தீம் மியூசிக் ஆகியவை வெற்றி பெற்றது
