Connect with us

ஆஸ்கர் ரேஸில் 3 இந்திய படங்கள்! வியந்து போன உலக சினிமா ரசிகர்கள்!

Hollywood Cinema news

ஆஸ்கர் ரேஸில் 3 இந்திய படங்கள்! வியந்து போன உலக சினிமா ரசிகர்கள்!

Social Media Bar

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள 95வது ஆஸ்கர் விருது விழா விரைவில் நடைபெற உள்ளது. பல நாடுகளிலும் பல படங்கள் எடுக்கப்பட்டாலும் ஆஸ்கர் விருது பெறுவது என்பது பல திரை கலைஞர்களின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது.

இந்தியாவும் ஆஸ்கர் விருதை பெற தீவிரமாக பல காலமாக முயன்று வருகிறது. அந்த வகையில் இந்தியா இந்த முறை ஆஸ்கருக்கு அனுப்பிய ”லாஸ்ட் ஃப்லிம் ஷோ” ஆஸ்கர் நாமினேஷனில் தேர்வாகவில்லை.

ஆனால் தனியாக சென்று போட்டியிட்ட ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான இறுதி பட்டியலில் தேர்வாகியுள்ளது. இதுதவிர மேலும் இரண்டு பிரிவுகளில் இரண்டு இந்திய படங்கள் தேர்வாகியுள்ளன. சிறந்த ஆவணப்படத்திற்கான இறுதி பட்டியலில் All That Breathes என்ற படம் தேர்வாகியுள்ளது.

All That Breathes

டெல்லியில் வசித்து வரும் முகமது சவுஹ் மற்றும் நதீம் ஷெஹாத் சகோதரர்கள் இணைந்து அந்த பெருநகரத்தில் வாழும் காயம்பட்ட பறவைகளுக்கு மருத்துவ உதவி செய்து மீண்டும் பறக்க செய்து வருகின்றனர். முக்கியமாக கருப்பு கழுகுகளை காப்பாற்றுவதில் மும்முரம் காட்டுகின்றனர். இந்த ஆவணப்படம் ஏற்கனவே சண்டேன்ஸ், கேன்ஸ் என பல விருது விழாக்களில் கலந்து கொண்டு விருதை அள்ளியுள்ளது.

The Elephant Whispers

அடுத்ததாக சிறந்த குறும் ஆவணப்படம் பிரிவில் The Elephant Whispers என்ற குறும் ஆவணப்படம் தேர்வாகியுள்ளது. தென்னிந்தியாவை சேர்ந்த பொம்மன், பெல்லி என்ற தம்பதியர் ஒரு அனாதை குட்டி யானையை தங்கள் குழந்தையாக பாவித்து வளர்த்து வருகின்றனர். அந்த ரகு என்னும் குட்டி யானைக்கும், அந்த தம்பதியருக்கும் இடையே உள்ள அன்பை விவரிக்கிறது இந்த ஷார்ட் டாக்குமென்டரி.

இந்தியாவை சேர்ந்த மூன்று படைப்புகள் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் இது உலக சினிமா ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

To Top