ஆஸ்கர் விருதுக்கு தகுதியாகி இருக்கும் 5 இந்திய திரைப்படங்கள்!

ஹாலிவுட் திரைப்பட துறையால் வழங்கப்படும் கெளரவமான ஒரு விருதாக ஆஸ்கர் விருது பார்க்கப்படுகிறது. வருடா வருடம் ஆஸ்கர் விருது வழங்கும்போது வெளிநாட்டு திரைப்படங்களுக்கும் கூட ஆஸ்கர் விருது வழங்குவது உண்டு.

அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் எதாவது ஒரு படம் ஆஸ்கர் விருதுக்காக தேர்வாகும். தேர்வு பட்டியலில் உள்ள படங்களில் எண்ட படத்திற்கு வேண்டுமானாலும் ஆஸ்கர் விருது கிடைக்கலாம்.

ஆனால் இந்த வருடம் மொத்தம் ஐந்து இந்திய படங்கள் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளன. அதில் மூன்று திரைப்படங்கள் தென்னிந்தியாவை சேர்ந்தவை. ஆர்.ஆர்.ஆர், காந்தாரா, இரவின் நிழல், கங்குபாய், காஷ்மீர் ஃபைல்ஸ் ஆகிய 5 படங்கள் ஆஸ்காருக்கு தேர்வாகியுள்ளன.

இதில் ஆர்.ஆர்.ஆர் மற்றும் காந்தாரா இரண்டு படங்களும் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். எனவே இவை இரண்டில் எதாவது ஒரு படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Refresh