Connect with us

இயக்குனர் சொல்லியும் கேட்காத நடிகர்.. படப்பிடிப்பு தளத்திலேயே நடிகையிடம் அத்துமீறல்!..

Gossips

இயக்குனர் சொல்லியும் கேட்காத நடிகர்.. படப்பிடிப்பு தளத்திலேயே நடிகையிடம் அத்துமீறல்!..

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் ஒருவராக இருந்தும் கூட பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார் இந்த மூன்றெழுத்து நடிகர். நிறைய திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்தாலும் இவரை கிசுகிசு என்பது இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருகிறார் இந்த நடிக.

ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அவர் அப்படி இல்லை அவர் அடித்த லூட்டிகளுக்கு அளவே இல்லை என்று கூறலாம். பேமஸான நடிகை ஒருவரை காதலித்து வந்த இவர் ஏதோ ஒரு காரணத்தினால் அவரிடமிருந்து பிரிந்து விட்டார்.

ஆனால் அந்த காலகட்டங்களில் அவர் செய்த வேலைகள் எல்லாம் எப்பொழுதும் பேசப்படும் விஷயமாக இருக்கின்றன. தமிழ் சினிமாவில் பெரிய ரசிக்கப்பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் இவரும் ஒருவர்.

கிசு கிசு இல்லாத நடிகர்:

அதே சமயம் தமிழ் சினிமாவில் நிறைய தோல்வி படங்களை இவர் கொடுத்திருக்கிறார் இருந்தாலும் இவ்வளவு விமர்சனங்களுக்கும் தோல்வி படங்களுக்கும் நடுவே தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி தான் வருகிறார்.

நிறைய தோல்வி படங்களுக்கு பிறகு சினிமாவில் கம்பேக்கொடுத்த இந்த நடிகர் அவர் திரைப்படத்தில் நடித்த மூன்றெழுத்து நடிகையை காதலிக்க துவங்கினார். தற்சமயம் அந்த நடிகையையே திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை நடத்தி வருகிறார் நடிகர்.

இதனால் அவர் குறித்து பெரிதாக கிசுகிசுக்கள் என்பது இல்லை என்றாலும் அந்த படபிடிப்பு நடந்த பொழுது இவர் செய்த சேட்டைகளுக்கு அளவே இல்லை. இந்த நிலையில் ஒருநாள் படபிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது நடிகையை மரத்து பக்கம் அழைத்துச் சென்று கட்டி பிடித்துக்கொண்டாராம் இந்த நடிகர்.

கடுப்பான இயக்குனர்:

இதை பார்த்த பட குழுவினர் எப்படி இவரை படபிடிப்புக்கு அழைப்பது என்று யோசித்துக் கொண்டு நின்று இருக்கின்றனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இயக்குனர் கடுப்பாகி படபிடிப்பை நிறுத்திவிட்டு வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டாராம்.

இப்படி படபிடிப்பு நடந்த நாளெல்லாம் பிரச்சனைகள் நடந்து கொண்டே இருந்ததாம். அடிக்கடி இந்த ஹீரோவும் கதாநாயகியும் காணாமல் போய்விடுவார்களாம். இந்த நிலையில் இவர்களை வைத்து அந்த படத்தை முடிப்பதற்கு இயக்குனர் பெரும்பாடு பட்டிருக்கிறார்.

அதற்கு பிறகு ஒரு நாள் இரண்டு பேரையுமே அழைத்த இயக்குனர் ஓப்பனாகவே இது குறித்து வார்னிங் கொடுத்து இருக்கிறார். அதற்கு பிறகுதான் இவர்கள் கொஞ்சமாக படத்தில் ஒழுங்காக நடித்து கொடுத்து இருக்கின்றனர்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

samantha nagarjuna
livingston daughter
actress manthra
malavika
madampatty rangaraj
samantha
To Top