Connect with us

அந்த படம் காஷ்மீர்ல எடுக்கவே இல்ல! – சினிமா விமர்சகருக்கு கொக்கி போட்ட நெட்டிசன்கள்!

Latest News

அந்த படம் காஷ்மீர்ல எடுக்கவே இல்ல! – சினிமா விமர்சகருக்கு கொக்கி போட்ட நெட்டிசன்கள்!

cinepettai.com cinepettai.com

வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்து நடித்து வரும் திரைப்படம் லியோ. லியோ படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் பல பெரும் பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர்.

படத்தின் முதல்க்கட்ட படப்பிடிப்பு தற்சமயம் காஷ்மீரில் நடந்து வருகிறது. படக்குழுவினர் பலரும் அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்சமயம் பிரபல சினிமா விமர்சகரான பிரசாந்த் போட்ட பதிவு மக்கள் மத்தியில் சர்ச்சையாகியுள்ளது.

அவரது பதிவில் கூறும்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்திற்கு பிறகு லியோ படத்தில் மீண்டும் காஷ்மீரை சிறப்பாக காண போகிறோம் என பதிவிட்டிருந்தார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் கூறும்போது ரோஜா படத்தின் முக்கால்வாசி காட்சிகள் குன்னூரில்தான் எடுக்கப்பட்டது. காஷ்மீருக்கு எல்லாம் செல்லவில்லை. என கூறுகின்றனர். இந்த நிலையில் பிரசாந்த்தின் இந்த ட்வீட் தற்சமயம் கலாய் மெட்டிரியலாக மாறியுள்ளது.

POPULAR POSTS

To Top