இந்தியாவிலேயே முதன் முதலாக க்ரியேட்டர்களால் உருவாக்கப்பட்ட டிவி சேனல் – உதவிய வடிவேலு

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ஒரு ப்ளாட் பார்மாக யூ ட்யூப் மாறி வருகிறது. யூ ட்யூப் தளத்தை பயன்படுத்தி பலரும் பல விதமான வீடியோக்களை வெளியிடுகின்றனர். மேலும் சாமனிய மக்கள் கூட தங்கள் திறமையை வெளிப்படுத்தி அதிகமாக சம்பாதிக்க யூ ட்யூப் உதவுகிறது. 

யூ ட்யூப்பில் அதிகமாக சம்பாதிக்கும் சில தளங்களில் ப்ளாக் ஷீப் ஒரு முக்கியமான தளமாகும். தமிழகத்தில் யூ ட்யூப் பிரபலமாக துவங்கிய காலம் முதலே ப்ளாக் ஷீப் சேனலும் பிரபலமாக உள்ளது. யு ட்யூப் தளத்தில் நல்ல வளர்ச்சியை கண்ட ப்ளாக் ஷீப் அதற்கு பிறகு ஓ.டி.டி தளத்தையும் உருவாக்கியது. ஆனால் ஓ.டி.டி தளம் மக்களிடையே அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை.

எனவே தற்சமயம் அதன் அடுத்த முன்னெடுப்பாக ஒரு சேட்டிலைட் டிவி சேனலை உருவாக்க திட்டமிட்டுள்ளது ப்ளாக் ஷீப் தளம். யூ ட்யூப் மூலம் சம்பாதித்து பெரும் உயரத்தை அடைய முடியும் என்பதற்கு ப்ளாக் ஷீப் ஒரு உதாரணமாக உள்ளது.

இந்த சேட்டிலைட் டிவி சேனலுக்கு ப்ராண்ட் அம்பாசிட்டராக தமிழின் முக்கிய நகைச்சுவை நடிகரான வடிவேலுவை நியமித்துள்ளனர். சேட்டிலைட் டிவி சேனல் என வரும்போது யூ ட்யூப்பை விட அதிக உழைப்பை போட வேண்டி இருக்கும். அதை ப்ளாக் ஷீப் குழு எப்படி செய்ய போகிறது என தெரியவில்லை என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜாவுடன் நடந்த ஒரு நிகழ்வில் இந்த செய்தியை வெளியிட்டது ப்ளாக் ஷீப் குழு

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh