உலகத்துலயே இதை யுவன் ரசிகர்களால் மட்டுமே செய்ய முடியும் – கின்னஸ் சாதனை படைத்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே இசையமைப்பாளர்களுக்கும் ஒரு பெரும் கூட்டம் ரசிகர்களாக இருக்கிறது. இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான் வரிசையில் அதிகமாக ரசிகர்களை கொண்ட, இசையால் அவர்களை கட்டிப்போட்ட ஒரு முக்கியமான இசையமைப்பாளர்தான் யுவன் சங்கர் ராஜா.

இசையமைக்கும் படங்களில் முக்கால்வாசி இவருக்கு ஹிட்டாகதான் அமைகிறது. இந்நிலையில் யுவன் ரசிகர்கள் 11,000 பேர் இணைந்து ஒரு உலக சாதனையை படைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த ரெளடி பேபி பாடலுக்கு 11,000 பேரும் ஒரே நேரத்தில் நடனமாடி கின்னஸ் உலக சாதனை செய்துள்ளனர்.

இந்த நிகழ்வில் யுவன் சங்கர் ராஜாவே நேரில் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார். இதற்கு எஸ்.என்.எஸ் இன்ஸ்டிட்யூசன் மற்றும் ப்ளாக் ஷீப் டிவி உதவியுள்ளது. யுவன் சங்கர் ராஜா பெயரை கின்னஸ் புத்தகம் வரை கொண்டு சென்றுள்ளனர் அவர் ரசிகர்கள்.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh