திடீர்னு மாடர்னுக்கு மாறிட்டீங்க – ட்ரெண்டுக்கு மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்

சினிமாவில் வெள்ளை நிற பெண்களே கதாநாயகிகள் ஆக முடியும் என்ற விஷயம் வழக்கமாக உள்ளது. அதிகப்பட்ச கதாநாயகிகள் வெள்ளை நிறத்தில்தான் இருக்கிறார்கள்.

ஆனால் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே சில நடிகைகள் அதற்கு விதி விலக்காக கருப்பாக இருந்தாலும் கூட நடிகையாக அனைவரையும் கவர்ந்துள்ளனர்.

பழைய நடிகையான கே.ஆர் விஜயாவில் துவங்கி பானுப்ரியா, தாமரை, ராதிகா என பலரும் வந்த தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷும்  முக்கியமானவர்.

தமிழில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்து அறிமுகமான இவருக்கு காக்கா முட்டை திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

நடிக்க வந்த புதிதில் எந்த ஒரு கதாநாயகியும் அம்மா வேடம் எடுத்து நடிக்க தயங்கும் இந்த சமயத்தில் அதை எளிமையாக செய்து பட வாய்ப்புகளை பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்சமயம் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Refresh