தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே குழந்தை நட்சத்திரமாக நிறைய திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை அபி நக்ஷத்ரா. அபி நக்ஷத்ரா நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது அயலி வெப் சீரிஸ்தான்
சீ5 இல் வெளியான அயலி வெப் சீரிஸில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் நடிகை அபி நக்ஷத்ரா. அந்த வெப் சீரிஸ் தமிழ்நாடு அளவிலேயே அதிக வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து அபி நக்ஷத்ராவுக்கு வாய்ப்புகள் அதிகமாக வந்தது.
இருந்தாலும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று நடிகையாக வருவார் என்று பலரும் நினைத்து வந்தனர். ஆனால் அவர் சின்னத்திரையில் வாய்ப்பை பெற்று நடிக்க சென்றார்.

அப்படியாக சன் டிவியில் ஒளிப்பரப்பான அன்னம் சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக களம் இறங்கினார் அபி நக்ஷத்ரா. அன்னம் சீரியல் இப்போது அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அபி நக்ஷத்ராவின் சம்பளமும் அதிகரித்துள்ளது. தற்சமயம் அபி நக்ஷத்ரா 20,000 ரூபாய் ஒரு நாளைக்கு சம்பளமாக வாங்கி வருகிறார்.
தொடர்ந்து வரவேற்புகள் கிடைக்கும் பட்சத்தில் அபி நக்ஷத்ராவின் சம்பளம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.









