Connect with us

கமல் சார்ட்ட சொல்ல போறேன்.. கதறி அழுத தனா! – வீட்டிற்குள் சென்ற ஜி.பி.முத்து!

Bigg Boss Tamil

கமல் சார்ட்ட சொல்ல போறேன்.. கதறி அழுத தனா! – வீட்டிற்குள் சென்ற ஜி.பி.முத்து!

Social Media Bar

பிக்பாஸ் ஷோவில் ஏற்கனவே ஜி.பி.முத்துவுக்கும், தனலெட்சுமிக்கும் சண்டை நடந்த நிலையில் தனலெட்சுமி வெளியேற்றப்பட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பரபரப்பாக நடந்து வருகிறது. போட்டி ஆரம்பமான சில நாட்களிலேயே ஜி.பி.முத்து மீது தனலெட்சுமிக்கு டீம் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டது.

முந்தைய நாள் ஆயிஷா உள்ளே வர ஜி.பி.முத்து மற்ற டீம்க்கு உதவியதை சுட்டிக்காட்டி அவரை வாழைப்பழ பெட்டுக்கு ஸ்வாப் செய்தார்கள். அதற்கு பிறகு நேற்று தனலெட்சுமி முறைத்ததாக ஜி.பி.முத்து கூற, அதற்கு தனலெட்சுமியில் பதிலுக்கு பேச வாக்குவாதம் பெரிதானது.

இந்த விஷயத்தில் டீம் லீடர் ஜனனியிடம் பேசிய ஜி.பி.முத்து தான் வயதில் பெரியவன் என்பதால் எல்லாரையும் தனது குழந்தைகள் போலவே பார்ப்பதாகவும், ஆனால் தனலெட்சுமி தனது வயதை கூட கருத்தில் கொள்ளாமல் தன்னை அவமதித்ததாகவும் கூறியிருந்தார்.

அதை கன்சிடர் செய்த ஜனனி இன்று தனலெட்சுமியை வெளியே ஸ்வாப் செய்து ஜி.பி,முத்துவை வீட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். இதனால் தனலெட்சுமி தனியே சென்று அழுதுக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரிடையே எழுந்துள்ள மோதலில் பலரும் ஜி.பி.முத்துவுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிகிறது.

இதுக்குறித்து தனலெட்சுமி ஆயிஷாவிடம் கூறும்போது “கமல் சார் வந்தாதான் இவங்களுக்கு ஒரு முடிவு கட்ட முடியும்” என கூறினார். வார இறுதியில் பிக் பாஸோடு பேசும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது பஞ்சாயத்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Articles

parle g
madampatty rangaraj
shoji morimoto
To Top