Connect with us

ரஜினியோட தலையெழுத்து அவரே தேர்ந்தெடுத்ததுதான்! – ரஜினி குறித்து கமல் சொன்ன தகவல்!

Rajini Kamal

Cinema History

ரஜினியோட தலையெழுத்து அவரே தேர்ந்தெடுத்ததுதான்! – ரஜினி குறித்து கமல் சொன்ன தகவல்!

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் பெறும் நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமானவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன். இருவருமே தமிழ் சினிமாவில் சமகாலத்தில் போட்டி நடிகர்களாக இருந்து பிறகு அவர்களுக்கென்று தனித்தனி பாதைகளை வகுத்துக் கொண்டவர்கள். 

Rajini Kamal

சாதாரணமாக தமிழ் திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கே கமல் மற்றும் ரஜினி இருவருக்கும் இடையிலான நடிப்பில் உள்ள வேறுபாடுகளை காண முடியும். ரஜினி பெரிதாக நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க மாட்டார். எப்போதும் கமர்சியல் ஆன ஒரு கதாபாத்திரத்தையே தேர்ந்தெடுப்பார்.

உதாரணத்திற்கு கூற வேண்டும் என்றால் நாட்டுக்கு நல்லது செய்யும் கதாநாயகன். அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாநாயகன் இப்படியான கதாபாத்திரங்களை தான் அதிகம் ரஜினிகாந்த் தேர்ந்தெடுத்து நடிப்பார்.

அதேசமயம் கமல்ஹாசனை பொருத்தவரை எந்த ஒரு கதாபாத்திரத்திலும் கமல்ஹாசனால் நடிக்க முடியும். உதாரணமாக ஒரு ஊனமுற்றவராக கமலஹாசன் நடிக்க முடியும். மனநலம் பாதிக்கப்பட்டவராக அவர் நடித்துள்ளார் இப்படி பல பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து கமல்ஹாசனால் நடிக்க முடியும்.

திரைத்துறையில் இருந்த போது கமல்ஹாசனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. ஏன் ரஜினி மட்டும் நம்மை போல எந்த படத்திலும் நடிப்பதில்லை. 

எனவே இது குறித்து ரஜினியிடம் கேட்டார் கமல்ஹாசன் அப்போது ரஜினி உங்கள் வழி தனி என் வழி தனி எனவே இருவரும் வேறு வேறு வழியில் பயணிப்பது தான் சரி எனக் கூறியுள்ளார்.

எனவே திரைத்துறையில் தான் எப்படியான ஒரு கதாநாயகனாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்தவரே ரஜினிகாந்த் தான் என்பதை கமல் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

POPULAR POSTS

To Top