விஜய் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த தயாரிப்பாளர்… கடுப்பான அஜித்..!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவராக இருக்கிறார்.
மற்ற நடிகர்கள் பலர் தன்னை பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை என்றாலும் கூட அஜித்துக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் என்பது மிகப் பெரியது.
அதனாலயே தொடர்ந்து அஜித் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் திரைப்படத்திலேயே நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித். அஜித்தை பொருத்தவரை அவருக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு என்று கூறப்படுகிறது. நடிகர் அஜித் ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றால் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் அஜித் திரைப்படத்தை தயாரிக்கும் பொழுது வேறு எந்த திரைப்படத்தையும் தயாரிக்க கூடாது என்பதை அஜித் ஒரு விதிமுறையாக வைத்துள்ளாராம்.
கடந்த காலங்களில் ஐங்கரன் நிறுவனம் அஜித்தை வைத்து ஏகன் திரைப்படத்தை தயாரித்த பொழுது அதே சமயத்தில் நடிகர் விஜய்யை வைத்து வில்லு திரைப்படத்தையும் தயாரித்து வந்தனர். அப்பொழுது படத்தின் தயாரிப்பாளர் வில்லு படப்பிடிப்பு தளத்திற்கு மட்டும் சென்றுவிட்டு ஏகன் படப்பிடிப்பு தளத்தை கண்டு கொள்ளாமல் இருந்தாராம்.
இதனால் கோபம் அடைந்த அஜித் அப்பொழுது இது குறித்து பேசியதாக வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதனால் இப்பொழுது அஜித் நடித்த திரைப்படத்திலும் தயாரிப்பாளர் அஜித் திரைப்படத்தை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்பது அஜித்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறதாம்.