இதை எல்லாம் இப்ப உள்ள பசங்க இழந்துட்டாங்க.. விளாசிய நடிகர் மாதவன்.!
தமிழ் சினிமாவில் இருந்த சாக்லேட் பாய் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மாதவன். ஒரு காலக்கட்டத்தில் நடிகர் மாதவனுக்கு பெரிய மார்க்கெட் ஒன்று இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருக்கான மார்கெட் என்பது குறைய துவங்கியது.
மீண்டும் தமிழ் சினிமாவில் அவருக்கு ரீ எண்ட்ரியாக இறுதி சுற்று திரைப்படம் அமைந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் மாதவன். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார் மாதவன்.
அதில் அவர் பேசிய விஷயங்கள் அதிக பிரபலமாகி வருகின்றன. தற்போதைய தலைமுறையினர் எதையெல்லாம் இழந்து உள்ளனர் என பேசுகிறார் மாதவன். அதில் அவர் கூறும்போது பசங்க மொபைலில் என்ன செய்யுறாங்கன்னே கண்டுபிடிக்க முடியல.
அதுவே பயமா இருக்கு. என் வீட்ல அப்படிதான் ரூம்ல ஒரு எட்டு பசங்க ஒன்னா உட்கார்ந்து அமைதியா மொபைல் பார்த்துட்டு இருந்தாங்க. என்ன பண்றாங்கன்னு எட்டி பார்த்தேன். மொபைலில் ரீல்ஸ் பார்த்துட்டு இருக்காங்க. ஒருத்தன் ஒரு ரீலை பார்த்து சிரிச்சிட்டு இன்னொருத்தனுக்கு அனுப்புறான்.
அவனும் அதை பார்த்து சிரிக்கிறான். இப்படியே ஒருத்தருக்கு ஒருத்தர் அனுப்பிக்கிறாங்க. நேருக்கு நேர் பேசி சிரிச்சிக்க மாட்டேங்குறாங்க. நம்ம காலத்துல 4 பசங்க கூடிட்டாளே பேசிக்கிட்டுதான் இருப்போம். ஒரே கொண்டாட்டமா இருக்கும்.
இப்ப பசங்களுக்கு அந்த கொண்டாட்ட மனநிலையே இல்லாம போச்சு என பேசியுள்ளார் மாதவன்