தண்ணி அடிச்சதால ஒன்னும் அவர் சாகல!.. உண்மையை உடைத்த மணிவண்ணன் தங்கை!.

actor manivannan : தமிழில் உள்ள முக்கியமான இயக்குனர்களில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் மணிவண்ணன். ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் நிறைய வெற்றிகளை கொடுத்துள்ளார் மணிவண்ணன்.

மணிவண்ணனுக்கு அதிகமான அரசியல் ஞானம் உண்டு. எப்போதும் அரசியல் குறித்து ஏதாவது சர்ச்சையான விஷயங்களை கூறி கொண்டிருப்பார். அதே போல கடவுள் மறுப்பை தீவிரமாக பின்பற்றி வந்தார் மணிவண்ணன்.

Social Media Bar

இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் இயற்கை எய்தினார். இதனை தொடர்ந்து அவர் அதிகமாக மது அருந்திய காரணத்தினால்தான் இயற்கை எய்தினார் என்று செய்திகள் பரவி வந்தன. பலரும் அதையே நம்பி வந்தனர். இதுக்குறித்து அவரது தங்கை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அதில் அவர் கூறும்போது மணிவண்ணன் தனது மனைவிக்கு இடையில் உடல்நிலை சரியில்லாமல் போனப்போதே மது பழக்கத்தை விட்டிருந்தார். அதன் பிறகு வெகு நாட்களாக மது அருந்தாமல்தான் இருந்தார். அதன் பிறகு ஏதோ மன உளைச்சல் காரணமாக இறப்பதற்கு சில தினங்கள் முன்புதான் கொஞ்சம் மது அருந்தி வந்தார்.

எனவே மது அருந்தியதால் அவர் இறந்தார் என கூறுவதே சுத்த பொய்தான் என அவர் கூறியுள்ளார்.